இந்தியாவில் அமெரிக்காவின் ’பரம்பரை’ வரி தேவை என பேசிய பாஜக எம்பி.. மோடி பதில் என்ன? சீறும் காங்கிரஸ்
டெல்லி: இந்தியாவிலும் அமெரிக்காவின் பரம்பரை வரி தேவை என பாஜக எம்பியும் முன்னாள் மத்திய நிதித்துறை இணை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா பேசியிருப்பது குறித்து பிரதமர் மோடி விளக்கம் அளிப்பாரா? என மூத்த காங்கிரஸ் தலைவர் ஜெயராம் ரமேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் தற்போது பாஜக, காங்கிரஸ் இடையே செல்வந்த வரி, பரம்பரை அல்லது வாரிசுரிமை வரி குறித்த விவாதம் உச்சகட்டமாக நடைபெற்று வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகள் அடிப்படையில் இந்த சர்ச்சை வெடித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையில், சொத்துகள் விவரங்கள் சேகரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இதனை குறிப்பிட்டு பேசும் பிரதமர் மோடி, உங்கள் சொத்துகளை காங்கிரஸ் அரசாங்கம் கைப்பற்றி அதிக குழந்தைகள் பெறும் சமூகத்துக்கு தரப் போகிறது என முஸ்லிம்களை குறிப்பிட்டுப் பேசியிருந்தது சர்ச்சையானது. இது தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
Meanwhile Amit Malviya regretting why he didn’t delete his past tweets…… pic.twitter.com/kuBvT9tHQa
— Pawan Khera 🇮🇳 (@Pawankhera) April 24, 2024
இதனிடையே காங்கிரஸ் கட்சியின் அயலக அணி பொறுப்பாளர் சாம் பித்ராடோ, அமெரிக்காவில் பரம்பரை வரி 55% விதிக்கப்படுவதை நியாயப்படுத்தி கருத்துகளை தெரிவித்திருந்தார். இது சர்ச்சையை மேலும் அதிகப்படுத்தி உள்ளது. இது தொடர்பாக பிரதமர் மோடி பேசுகையில், பரம்பரை வரி, நடுத்தர மக்கள் மீது கூடுதல் வரி ஆகியவற்றை காங்கிரஸ் விதித்து விடும். பரம்பரை வரி அல்லது வாரிசுரிமை என்ற அடிப்படையில் உங்கள் சொத்துகளில் பாதியை அரசாங்கம் கைப்பற்றிவிடும் என பேசியிருக்கிறார். இது காங்கிரஸ் கட்சிக்கு கடும் நெருக்கடியை கொடுத்திருக்கிறது. சாம்பித்ராடோவின் கருத்து காங்கிரஸின் கருத்து அல்ல; அவரது தனிப்பட்ட கருத்து என்கிறது காங்கிரஸ்.
இன்னொரு பக்கம் சாம்பித்ராடோ கருத்தை மறைமுகமாக ஆதரிக்கும் வகையில் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர் காங்கிரஸ் தலைவர்கள். அக்கட்சியின் மூத்த தலைவர் ஜெயராம் ரமேஷ், தமது எக்ஸ் பக்கத்தில் பாஜக எம்பியும் முன்னாள் நிதித்துறை இணை அமைச்சருமான ஜெயந்த் சின்ஹா பேசிய வீடியோ ஒன்றை வெளியிட்டு, உங்கள் எம்பி ஜெயந்த் சின்ஹா இந்தியாவில் அமெரிக்காவின் பரம்பரை வரி/ வாரிசுரிமை வரி விதிக்கப்பட வேண்டும் என பேசியிருக்கிறார். இந்தியாவில் அமலலில் இருந்த பரம்பரை வரி அல்லது வாரிசுரிமை வரியை 1985-ல் ரத்து செய்தவர் ராஜீவ் காந்தி. காங்கிரஸை விமர்சிக்கும் பிரதமர் மோடி, பாஜக எம்பி ஜெயந்த் சின்ஹாவின் பேச்சுக்கு என்ன பதிலைத் தருவார் என கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications