மத்திய பாஜக அரசு மீது ட்விட்டர் மாஜி சிஇஓ சரமாரி புகார்- ஜனநாயகப் படுகொலை- காங்கிரஸ் கொந்தளிப்பு!
டெல்லி: ட்விட்டர் நிறுவனத்தை இழுத்து மூடுவோம்; ரெய்டு நடத்துவோம் என மத்திய பாஜக அரசு மிரட்டல் விடுத்தது ஜனநாயகப் படுகொலை என காங்கிரஸ் கட்சி கடுமையாக கண்டனம் தெரிவித்துள்ளது.
ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி மத்திய பாஜக அரசு மிக கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார். மத்திய பாஜக அரசின் மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறக் கோரி டெல்லி எல்லைகளில் ஓராண்டாக விவசாயிகள் கடும் வெயில், வாட்டும் குளிர், பனியில் உயிரை கொடுத்து போராட்டம் நடத்தினர். இப்போராட்டங்களில் 800க்கும் அதிகமானோர் மரணமடைந்தனர்.

இந்த விவசாயிகள் போராட்டம் நடைபெற்ற காலத்தில், விவசாயிகள் போராட்டங்களை பகிர்ந்து கொள்ளக் கூடிய ட்விட்டர் கணக்குகள், விவசாயிகள் போராட்டத்தை முன்வைத்து மத்திய அரசை விமர்சிக்கும் ட்விட்டர் கணக்குகள் உள்ளிட்டவைகளை முடக்கித்தான் ஆக வேண்டும் என மத்திய பாஜக அரசு கடும் நெருக்கடி தந்தது. அப்ப்டி செய்யாமல் போனால், ட்விட்டர் நிறுவனத்தின் இந்திய அலுவலகம் மூடப்படும்; ட்விட்டர் நிர்வாகிகளின் வீடுகளில் ரெய்டுகள் நடக்கும் எனவும் மிரட்டல் விடுக்கப்பட்டிருக்கிறது. இதனை ட்விட்டர் நிறுவனத்தின் முன்னாள் தலைமை செயல் அதிகாரி ஜேக் டோர்சி பகிரங்க குற்றச்சாட்டுகளாகத் தெரிவித்திருப்பதுதான் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஆனால் ஜேக் டோர்சியின் இந்த குற்றச்சாட்டுகளை மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார்.
இந்த விவகாரத்தை கையில் எடுத்திருக்கும் காங்கிரஸ், மத்திய பாஜக அரசை கடுமையாக சாடி உள்ளது. காங்கிரஸ் கட்சியின் சமூக வலைதளம், டிஜிட்டல் ஊடகங்களுக்கான பொறுப்பாளர் சுப்ரியா ஸ்ரீநாதே, மத்திய பாஜக அரசின் செயலை ஜனநாயகப் படுகொலை என கண்டித்துள்ளார். இந்தியா ஜனநாயகத்தின் தாய்; இங்குதான் ஜனநாயகமே படுகொலை செய்யப்பட்டுள்ளது எனவும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் ஓராண்டு காலம் விவசாயிகள் மழையிலும் பனியிலும் குளிரிலும் போராடிய போது காலிஸ்தானிகள், பாகிஸ்தானிகள், பயங்கரவாதிகள் எனட்விட்டரில் விமர்சிக்கப்பட்டனர். அப்படி போராடிய விவசாயிகள் போராட்டத்தை வெளிப்படுத்தினால், உலகத்துக்கு காட்டினால் ரெய்டு நடத்துவோம்; அலுவலகத்தை மூடுவோம் என மிரட்டல் விடுத்துள்ளது மத்திய பாஜக அரசு என்றார் சுப்ரியா ஸ்ரீநாதே.
அதேபோல் மூத்த காங்கிரஸ் தலைவர் ரந்தீப் சுர்ஜிவாலா, ட்விட்டர் முன்னாள் தலைமை செயல் அதிகாரி பகிரங்கமாக முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பிரதமர் மோடி அரசாங்கம் வெளிப்படையான பதில்களைத் தர வேண்டும் என வலியுறுத்தினார்.
-
பாஜக கொடியை நீக்கிய அண்ணாமலை.. உருவாகும் 'மக்கள் சக்தி இயக்கம்'.. காரில் வரும் புதிய கொடி! -
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
ஐபிஎஸ் டூ அரசியல்.. 5 பக்க லெட்டரில் முடிந்த 7 ஆண்டு பாஜக பயணம்.. அண்ணாமலைக்கு அடுத்தது என்ன? -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அண்ணாமலை தலைவராக இருந்தால் இந்த வெற்றி கூட வந்திருக்காது.. பாஜக துணை தலைவர் கேபி ராமலிங்கம் விளாசல் -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications