பாஜகவில் 10 முதல்வர்களில் ஒருத்தர்தான் ஓபிசி.. ஜாதிவாரி கணக்கெடுப்பு எப்போது? ராகுல் சரமாரி தாக்கு
டெல்லி: லோக்சபா தேர்தலில் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கான பிரதிநிதித்துவம் ஆகியவற்றை பாஜகவுக்கு எதிரான ஆயுதமாக காங்கிரஸ் கையில் எடுக்க இருப்பதை அக்கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வெளிப்படுத்தி உள்ளார்.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் இன்று நடைபெற்றது. தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மிசோரம் மாநில சட்டசபை தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்ட நிலையில் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் இன்று நடந்தது.

4 மாநில முதல்வர்கள் பங்கேற்பு: இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் 4 முதல்வர்களான சித்தராமையா (கர்நாடகா), பூபேஷ் பாகெல் (சத்தீஸ்கர்), அசோக் கெலாட் (ராஜஸ்தான்) , சுக்விந்தர் சுகு (இமாச்சல பிரதேசம்) பங்கேற்றனர். இக்கூட்டத்துக்குப் பின்னர் 4 மாநில முதல்வர்கள் புடைசூழ செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என காங்கிரஸ் செயற்குழுக் கூட்டம் வலியுறுத்துகிறது. இது முற்போக்கான ஒரு நடவடிக்கை.
காங்கிரஸ் மாநிலங்களில்..: காங்கிரஸ் ஆட்சி செய்யும் 4 மாநிலங்களிலும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தவும் அதன் விவரங்களை வெளியிடவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். நமது நாட்டின் பிரதமர் மோடியால் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடியாது. ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தகுதி இல்லாதவர் பிரதமர் மோடி.
பாஜக, காங்கிரஸ் முதல்வர்கள்: பாஜகவின் மொத்தம் 10 மாநில முதல்வர்களில் ஒரே ஒருவர்தான் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பு- ஓபிசி (OBC). ஆனால் காங்கிரஸ் கட்சியின் 4 மாநில முதல்வர்களில் 3 பேர் ஓபிசி வகுப்பைச் சேர்ந்தவர்கள். பிரதமர் மோடி, ஓபிசி மக்களுக்காக செய்ததுதான் என்ன? பிரதமர் மோடி இதர பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எதுவும் செய்யவில்லை.
நீதிக்கானது ஜாதிவாரி கணக்கெடுப்பு: ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது அரசியல் அல்ல. ஜாதிவாரி கணக்கெடுப்பு என்பது நீதியின் அடிப்படையிலான கோரிக்கை. ஜாதிவாரி மக்கள் கணக்கெடுப்பு நாடு முழுவதும் நடத்தப்பட வேண்டும். அப்படி பாஜகவால் ஜாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்த முடியாவிட்டால் ஆட்சியில் இருந்து விலகட்டும்; காங்கிரஸ் ஆட்சி அமைத்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தும்.
5 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சி: தற்போது 5 மாநில சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. ராஜஸ்தான், சத்தீஸ்கர், மத்திய பிரதேசம், தெலுங்கானாவில் காங்கிரஸ் ஆட்சிதான் அமையும். மிசோரமிலும் காங்கிரஸ்தான் இந்த முறை ஆட்சி அமைக்கப் போகிறது. இவ்வாறு ராகுல் காந்தி கூறினார்.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
சித்தராமையாவிற்கு புது பொறுப்பு.. காங்கிரஸில் முக்கிய முடிவுகளை எடுக்கும் செயற்குழுவில் இடம் -
முடிவுக்கு வந்த சித்தராமையா யுகம்! கர்நாடகா புதிய முதலமைச்சராக இன்று பதவியேற்கிறார் டிகே சிவக்குமார் -
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
ஸ்டாலினை ஓரங்கட்டிவிட்டு விஜய்யை வாரி அணைத்த ராகுல் காந்தி! பின்னணியில் டெல்லி மாஸ்டர் பிளான் -
விஜய்யை பார்க்க வேண்டாம்.. ஸ்டாலினை கைவிட்டு இருக்க கூடாது.. ராகுலிடம் எகிறிய ப்ரியங்கா காந்தி! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்!












Click it and Unblock the Notifications