ஜாதி வாரி கணக்கெடுப்பை நடத்த மத்திய அரசு முடிவு.. மகளிர் இடஒதுக்கீடு விவாதத்தில் அமித்ஷா கூறிய தகவல்
டெல்லி: ''எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது'' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
நாடாளுமன்றத்தின் 3 நாள் சிறப்பு கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. நாடாளுமன்றம் மற்றும் சட்டசபையில் பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது, மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் லோக்சபா தொகுதி மறுவரை செய்வது தொடர்பாக 3 மசோதாக்கள் நேற்று தாக்கல் செய்யப்பட்டன.

மத்திய சட்ட அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் 131-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதா 2026 (பெண்களுக்கான 33 இடஒதுக்கீட்டை நாடாளுமன்றம், சட்டசபையில் உறுதி செய்யும் மசோதா) மற்றும் மாநிலங்களுக்கான தொகுதி மறுசீரமைப்பு மசோதா 2026 (Delimitation Bill) 2026 ஆகியவற்றை அறிமுகம் செய்தார். அதேபோல் யூனியன் பிரதேச சட்டங்கள் (திருத்த) மசோதா, 2026-யை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அறிமுகம் செய்தார்.
அதன்பிறகு விவாதம் தொடங்கி நடந்தது. இன்று மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று பதிலுரை வழங்கினார். அப்போது அவர் கூறியதாவது: ''எதிர்க்கட்சிகள் மகளிர் இடஒதுக்கீட்டுக்கான சட்ட திருத்த மசோதாவை எதிர்க்கவில்லை, மாறாக மகளிர் இட ஒதுக்கீட்டையே எதிர்க்கின்றன. மகளிர் இடஒதுக்கீடு சட்டத்திருத்தத்தை 'இந்தியா' கூட்டணியைத் தவிர வேறு யாரும் எதிர்க்கவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்தபோதும், எதிர்க்கட்சியாக இருந்தபோதும் தொகுதி மறுவரையறையை எதிர்த்து வருகிறது. 'இந்தியா' கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அது, இது என்று கூறி மகளிர் இடஒதுக்கீட்டு மசோதாவை எதிர்த்து வருகின்றன.
தொகுதி மறுவரையறைக்கு பின் பெண்களுக்கு இடஒதுக்கீடு அமல்படுத்தப்படும். பெண்களுக்கு அதிகாரம் அளிக்கவும், சரிக்கு சமமான பிரதிநிதித்துவம் வழங்குவதற்காகவும் தான் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதாவை கொண்டு வந்துள்ளது. தொகுதி மறுவரையறையை எதிர்ப்பது என்பது பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினருக்கான இடங்களை அதிகரிப்பதை எதிர்ப்பதாகும். அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளபடி சம பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காகவே தொகுதி மறுவரையறை செய்யப்படுகிறது. 1972ம் முதல் மக்கள்தொகை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் தொகுதி மறுவரையறை முக்கியம்
140 கோடி மக்களின் மனதில் எந்த குழப்பமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்யும் வகையில் 2026ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புடன் ஜாதி வாரி கணக்கெடுப்பையும் நடத்த பிரதமர் நரேந்திர மோடி அமைச்சரவை முடிவு செய்துள்ளது என்பதை நான் தெளிவுப்படுத்த விரும்புகிறேன். மேலும் அரசியலமைப்பில் மத அடிப்படையிலான இட ஒதுக்கீடு இல்லை. ஆனால் காங்கிரஸ் சமாதானப்படுத்தும் அரசியலை கையில் எடுத்துள்ளது. காங்கிரஸ் அரசு, இட ஒதுக்கீட்டுக் குழுக்களின் பணிகளை முடக்குவதோடு, அவர்களின் ஆலோசனைகளைப் புறக்கணித்தது
ராகுல் காந்தி நாடாளுமன்றத்தில் நேரத்தை வீணடித்து வருகிறார். கொரோனா பரவல் காரணமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதப்பட்டது. தொகுதி மறுவரையறை என்பது தென்மாநிலங்களுக்கு எதிரானது இல்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் தெற்கு VS வடக்கு என்று பிரச்சனையை உருவாக்க முயற்சிக்கின்றன. பெண்களுக்கான இடஒதுக்கீடு மசோதா தங்களின் வாக்குகள் இன்றி தோல்வியடைந்து விடும் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். ஆனால் மசோதாவை தோல்வியடைய விடமாட்டேன். '' என 'அட்டாக்' செய்துள்ளார்.
-
224 யூனிட்டுகளுக்கு 200 யூனிட் இலவசம் என்றால் 112 தானே வரனும்.. ஏன் 312 காட்டுகிறது.. விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
பாக்கெட் தோசை மாவு வாங்கறீங்களா? பிரிட்ஜில் இட்லி மாவு வைக்கிறீங்களா? இதை முதல்ல தெரிஞ்சுக்கோங்க -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
ஒரு கூட்டு கிளியாக ஒரு தோப்பு குயிலாக! கோபத்தில் குட்டி சிறுத்தைகள்! வெள்ளைக் கொடியோடி தாய் சிறுத்தை -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
திருச்சி கிழக்கு உள்பட 4 தொகுதிகளுக்கும் சேர்த்து இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்?












Click it and Unblock the Notifications