இன்று சூடான்.. அன்று உக்ரைன்! அச்சத்தில் தமிழர்கள் - ஸ்டாலின் ஆக்சன்.. கட்டுப்பாட்டு அறை திறப்பு
டெல்லி: சூடான் நாட்டில் தொடர்ந்து வரும் உள்நாட்டு போருக்கு மத்தியில் சிக்கித்தவிக்கும் தமிழர்களை பாதுகாப்பாக சொந்த ஊருக்கு அழைத்து வருவதற்கு பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தை அடுத்து டெல்லியில் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உதவி எண்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
சூடானில் துணை ராணுவப் படையான RSF மற்றும் ராணுவத்திற்கு இடையில் ஏப்ரல் 13 ஆம் தேதி இந்த மோதல் பூதாகரமாக வெடித்தது. இரு தரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் சரமாரி தாக்குதல்களில் ஈடுபடத் தொடங்கினர். தலைநகர் கார்ட்டூமில் உள்ள அரசு அலுவலகங்கள், விமான நிலையங்கள், பொதுமக்கள் கூடும் முக்கிய இடங்களில் தாக்குதல்கள் தொடர்ந்தன.
துப்பாக்கிச் சூடு, குண்டுவீச்சு தாக்குதல்களை தொடர்ந்து ஜனாதிபதி மாளிகை, விமான நிலையம், ராணுவ தலைமையகம் போன்ற பல பகுதிகளை துணை ராணுவப் படை கைப்பற்றியது. இதுவரை நடந்த மோதலில் 459 பேர் கொல்லப்பட்டு உள்ளதாகவும், 4,072 பேர் படுகாயம் அடைந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதில் ஏராளமான தமிழர்களும் சிக்கித்தவித்து வருகின்றனர்.

அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு ஆபரேசன் காவிரி என்ற திட்டத்தை எடுத்து பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், உக்ரைன் - ரஷியா போரில் சிக்கிய தமிழர்களை மீட்க மத்திய அரசுடன் கை கோர்த்ததைபோல் தமிழ்நாடு அரசு சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்கவும் களமிறங்கி இருக்கிறது. இது தொடர்பாக இன்று காலை பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதினார். அதன் தொடர்ச்சியாக கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டு இருக்கும் செய்திக்குறிப்பில் தெரிவித்து உள்ளதாவது, "சூடான் நாட்டில் நடைபெற்று வரும் இராணுவம் மற்றும் உள்நாட்டு படைப் பிரிவினர்களுக்கு இடையேயான மோதல்களினால் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலை காரணமாக. அங்கு வசிக்கும் தமிழ் மக்கள் உட்பட ஏராளமான இந்தியர்கள் பாதுகாப்பற்ற நிலையில் சிக்கித் தவிக்கின்றனர்.
அவர்களை மீட்க கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் உள்ள அவர்களது குடும்பத்தினரிடமிருந்து தமிழ்நாடு அரசிற்கு கோரிக்கைகள் தொடர்ந்து வருவதன் அடிப்படையில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைப்படி உடனடியாக அங்கு சிக்கியுள்ள தமிழர்களின் விவரங்களை பகிரக் கோரியும், அவர்களை பாதுகாப்பாக தமிழகம் மீட்க கோரியும் தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் ஜெத்தாவில் உள்ள இந்திய தூதரகத்திடம் கோரப்பட்டுள்ளது.

மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் Whatsapp குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது. தற்போது ஒன்றிய அரசின் "ஆப்ரேசன் காவிரி" என்ற திட்டத்தின் மூலமாக சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சவுதி அரேபியாவில் உள்ள ஜெத்தாவிற்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் நடைப்பெற்று வருகின்றன.
ரஷ்யா - உக்ரைன் போரின் போது, விமானம் மூலம் புதுடெல்லி மற்றும் மும்பைக்கு மீட்கப்பட்ட தமிழர்களை, தமிழ்நாடு அரசின் செலவில் தமிழகத்தில் உள்ள அவர்களது சொந்த ஊர்களுக்கு அழைத்து செல்லப்பட்டது போன்று இந்நேர்விலும் நடவடிக்கை மேற்கொள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளதன் அடிப்படையில் புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்திலும், அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையிலும் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டுப்பாட்டு அறை (Control Room) அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைப்பெற்று வருகிறது.
புதுடெல்லி தமிழ்நாடு இல்லத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்: 011-2419 3100, 9289516711. [email protected] மற்றும் அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகம், சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையின் தொடர்பு விவரங்கள்:+91-96000 23645, [email protected]" என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
-
“எடப்பாடி பழனிசாமி ஒரு மனநல மருத்துவரை பார்த்து பரிசோதிப்பது நல்லது”.. திமுக பெண் தலைவர்கள் தாக்கு -
ஸ்டாலினா? எடப்பாடியா? உண்மையிலேயே யார் 'கெத்து'? ரெக்கார்டு என்ன சொல்லுது? -
இது இந்தியா இல்லை.. நேபாளத்தில் குட்கா போட்டு துப்பிய சுற்றுலா பயணிகளுக்கு மறக்க முடியாத சம்பவம் -
சென்னையில் எந்தெந்த சமூகத்தினருக்கு எம்.எல்.ஏ சீட்? திமுக பிரதிநிதித்துவ ஃபார்முலா! -
சென்னை மெட்ரோ ரயிலில் திடீரென சர்ப்ரைஸ் கொடுத்த ஸ்டாலின்.. செல்ஃபி எடுத்த பயணிகள் -
அடித்தாடும் ஸ்டாலின்.. இன்று 4 ஆம் கட்ட பரப்புரை.. தஞ்சாவூரில் தொடங்குகிறார் முதல்வர் -
உடலுறவில் மனைவி கழுத்தை "இறுக்கிய" கணவர்.. பரிதாபமாக பறிபோன உயிர்.. அதிர்ச்சி சம்பவம் -
மோடியை கொல்ல சதி.. அலறிய அமெரிக்க CIA.. உடனே இந்தியாவுக்கு பறந்த மெசேஜ்.. 3 பேர் அதிரடியாக கைது -
போர்க்களத்தில் எதற்காக காண்டம்? ஒவ்வொரு வீரரின் பாக்கெட்டிலும் "இது" இருக்குமாம்.. செம சர்ப்ரைஸ் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி: உங்கள் நகை எப்போது கைக்கு வரும்? முழு விவரம் -
விஜய்யிடம் காசு வாங்கிக்கொண்டு பெரம்பூரில் பாமக போட்டி.. காடுவெட்டி குருவின் மகள் பேச்சு -
ஒரு கிராம் தங்கம் வெறும் ரூ.181 தான்.. முட்டை விலையை விட குறைவு.. எந்த நாட்டில் தெரியுமா? பின்னணி












Click it and Unblock the Notifications