Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நாடாளுமன்றத்தில் வக்ஃப் சட்ட திருத்த மசோதா தாக்கல்- சர்ச்சைக்குரிய அம்சங்கள் என்ன?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்றத்தில் இன்று சர்ச்சைக்குரிய வக்ஃப் (வக்பு, வக்ஃபு) சட்ட திருத்த மசோதாவை மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தாக்கல் செய்தது. இஸ்லாமியர்களின் மத சுதந்திரத்தில் தலையிடக் கூடியதாக விமர்சிக்கப்படும் இந்த மசோதாவை எதிர்க்கட்சிகள் முழுவீச்சில் எதிர்த்துள்ளன.

வக்ஃப் என்றால் என்ன? வக்ஃப் வாரியத்தின் சொத்துகள், வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா என்பது என்ன? உள்ளிட்டவைகளை கீழே காணலாம்:

waqf bill parliament

வக்ஃப் என்றால் என்ன?

வக்ஃப் என்பது இஸ்லாமியர்கள் இறைபணிக்காக நன்கொடையாக வழங்கும் அசையும் மற்றும் அசையா சொத்துகளைக் குறிப்ப்டுவதாகும். இப்படி வக்ஃப் வழங்கப்பட்ட சொத்துகளுக்கு பின்னர் உரிமை கோர முடியாது.

வக்ஃப் சொத்துகள் எவை?

வக்ப்ஃ சொத்துகள் இருவகைப்படும். ஒன்று அல்லாவின் பெயரில், அல்லாவுக்கு நன்கொடையாக வழங்கப்படுகிற சொத்து. இதற்கு யாருமே உரிமை கோர முடியாது.

மற்றொரு வகையானது, நன்கொடையாக வழங்கப்பட்ட சொத்துகளை உரிமையாளர்களின் குடும்ப வாரிசுகள் பராமரித்துக் கொள்வதாகும்.

வக்ஃப் சொத்துகள் எப்படி வழங்கப்படும்?

வக்ஃப் வாரியத்துக்கு வழங்க விரும்புகிற நிலத்தை, மசூதிக்கோ மசூதி அல்லது தர்காவுக்கு கொடுக்கலாம். இந்த சொத்துகள் மூலமான வருவாயை மசூதி அல்லது தர்கா வழிபாட்டுக்கு பயன்படுத்தலாம். இத்தகைய வக்ஃப் நிலத்தை எவருக்கும் விற்பனை செய்ய முடியாது. ஆனால் குத்தகை, வாடகைக்கு கொடுக்கலாம்.

வக்ஃப் வாரியம்- முத்தவல்லிகள் யார்?

வக்ஃப் வாரியத்தின் சொத்துகளை கண்காணிக்கக் கூடியவர்கள் முத்தவல்லிகள் என அழைக்கப்படுகின்றனர்.

வக்ஃப் சொத்துகள் பற்றிய விவரங்கள் உள்ளனவா?

2009ம் ஆண்டு வக்ஃப் சொத்துகளின் விவரங்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. மொத்தம் 8,72,324 அசையா சொத்துகள்; 16,713 அசையும் சொத்துகள், வக்ஃபு சொத்துகளாக இருக்கின்றன. இவற்றில் 15 மாநிலங்களில் 97% வக்ஃபு சொத்துகள் இருக்கின்றன. உ.பி.யில் மட்டுமே 2,32,457 வக்ஃப் சொத்துகள் உள்ளன; ஒடிசாவில் 10,314 வக்ஃப் சொத்துகள் இருக்கின்றன.
இவற்றில் 39% வக்ஃப் சொத்துகள் மட்டுமே எந்த வித வில்லங்கமும் இல்லாதவை. 50% வக்ஃப் சொத்துகள் குறித்த உறுதியான விவரங்கள் இல்லை. 7% வக்ஃப் சொத்துகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 2% வக்ஃப் சொத்துகள் மீது வில்லங்கம் உள்ளன. 2022-ம் ஆண்டின் கணக்குகளின் படி வக்ஃபு வாரிய சொத்துகளின் மதிப்பு ரூ1.2 லட்சம் கோடி.

வக்ஃப் சட்டங்கள் என்பவை எவை?

வக்ஃப் சொத்துகளைக் கணிக்காக்க 1954-ம் ஆண்டு முதன் முதலாக வக்ஃப் வாரிய சட்டம் கொண்டுவரப்பட்டது. இதனடிப்படையில் மாநிலங்கள் அனைத்திலும் 1958-ல் வக்ஃப் வாரியங்கள் உருவாக்கப்பட்டன.

1954-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வக்ஃப் சட்டத்தில் 1995-ம் ஆண்டு முக்கியமான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா என்பது என்ன?

1995-ம் ஆண்டு வக்ஃப் வாரிய சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படுவதுதான் வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா 2024 ஆகும்.


வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதாவின் முக்கிய அம்சங்கள் என்ன?

-5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃப் வாரியத்துக்கு சொத்துகளை வழங்க முடியும்.

- வக்ஃப் வாரிய நிலத்தை அளவீடு செய்யும் அதிகாரம் கூடுதல் ஆணையரிடம் இருந்தது. இந்த அதிகாரம் தற்போது மாவட்ட ஆட்சியரிடம் வழங்கப்பட்டுள்ளது

- மத்திய வக்ஃப் கவுன்சில், மாநில வக்ஃப் வாரியங்களில் முஸ்லிம்கள் அல்லாத 2 பிரதிநிதிகள் இடம் பெறுதல் அவசியம். வக்ஃப் வாரியத்தில் முஸ்லிம் பெண்களுக்கும் இடம் தர வேண்டும்.

- முஸ்லிம்களில் உள்ள போஹ்ரா, அககானி பிரிவுகளுக்கும் தனி வக்ஃப் வாரியம் அமைக்கப்படும்.

- வக்ஃப் வாரிய சொத்து எது என்பதை மிடிவு செய்யும் அதிகாரம் இனி அந்த அமைப்புக்கு இல்லை. வக்ஃப் தீர்ப்பாயமே இறுதி முடிவு எடுக்கும். வக்ஃப் தீர்ப்பாயத்தில் ஏற்கனவே 3 உறுப்பினர்கள் இடம் பெற்றிருந்தனர். இனி வக்ஃப் வாரிய தீர்ப்பாயத்தில் 2 பேர் மட்டுமே உறுப்பினர்கள். இத்தீர்ப்பாயத்தின் முடிவுக்கு எதிராக 90 நாட்களுக்குள் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவும் முடியும்.

- வக்ஃப் நிலத்தை ஒருவர் 12 ஆண்டுகள் ஆக்கிரமித்து வைத்திருந்தால் இனி அவர்களே இந்த வக்ஃப் நிலத்தின் உரிமையாளராகிவிட முடியும்.

- மாநில வக்ஃப் வாரிய உறுப்பினர்களுக்கும், தலைவருக்குமான தேர்தல் முறையானது ரத்து செய்யப்பட்டுள்ளது.

- வக்ஃப் சட்டம் தொடர்பான சிக்கல்களுக்கு தீர்வு காண முஸ்லிம் இல்லாதவராக இருப்பினும் கூட அந்தந்த மாவட்ட ஆட்சியருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது என்பது உள்ளிட்ட 40 திருத்தங்கள் இடம் பெற்றுள்ளன.

வக்ஃப் வாரிய சட்ட திருத்தம்- முதன்மை எதிர்ப்புகள்

-5 ஆண்டுகளுக்குக் குறையாமல் இஸ்லாமை பின்பற்றிய ஒரு நபர் மட்டுமே வக்ஃப் வாரியத்துக்கு சொத்துகளை வழங்க முடியும் என விதியால் முஸ்லிம் அல்லாதவர்களால் வக்ஃப் வாரியத்துக்கு தரப்பட்ட சொத்துகள் செல்லாது என்ற நிலைமை உருவாகும்..

- வக்ஃப் வாரியம் மற்றும் மத்திய கவுன்சிலில் பிற மதத்தவரும் இடம் பெறலாம் என்கிற போது, ஏன் பிற மதங்களில் இஸ்லாமியர்களுக்கும் இடஒதுக்கீடு தரப்படுமா?

- வக்ப்ஃ ஆக்கிரமிப்புகள் தொடர்பான சட்ட திருத்தம்.. அதாவது 12 ஆண்டுகளுக்கு மேல் ஒருவர் வக்ஃப் சொத்துகளை ஆக்கிரமித்திருந்தால் உரிமையாளராகிவிட முடியும் என்பதால் பெரும்பகுதியான வக்ஃப் சொத்துகளை வக்ஃப் வாரியம் இழந்துவிட நேரிடும்.

-வக்ஃப் வாரிய விவகாரங்களில் மாவட்ட ஆட்சியரின் முடிவுதான்- அரசு முடிவுதான் இறுதியானது என்பதன் மூலம் வக்ஃபு சொத்துகளில் பெரும்பகுதி அரசுடைமையாக நேரிடும்.

- வக்ஃப் வாரியங்களின் தேர்தல் ரத்து, முஸ்லிம் அல்லாத பிற மதத்தவரும் உறுப்பினராவது என்பது, அரசியல் சாசனம் தந்துள்ள மத சுதந்திரத்தில் தலையிடுவதாகும்

-வக்ஃப் பயனர் என்ற பிரிவை நீக்குவதன் மூலமாக வக்ஃப் சொத்துக்களை அங்கீகரிக்கும் பாரம்பரியத்தை அகற்றுவதாகும்.

-வக்ஃப் கட்டமைப்பு மாற்றப்பட்டு அரசின் கட்டுப்பாடு அதிகரிப்பதால் வநிறுவனங்களின் சுயாட்சியைப் பாதிக்கும். அரசு சொத்து என்று அடையாளம் காணப்பட்ட அல்லது அறிவிக்கப்பட்ட வக்ஃபு சொத்து, இந்தச் சட்டம் தொடங்குவதற்கு முன் அல்லது பின் என்றாலும் வக்பு சொத்தாகக் கருதப்படாது என்று இந்தச் சட்டம் கூறுகிறது. இது அரசுக்கு சொத்துக்களை மறுவகைப்படுத்தும் அதிகாரத்தை அளிக்கிறது.

நாடாளுமன்ற கூட்டுக் குழு என்பது என்ன?

வக்ஃப் வாரிய சட்ட திருத்த மசோதா நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட போது எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தன. இதனையடுத்து நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் பரிந்துரைக்கு இந்த மசோதா அனுப்பி வைக்கப்பட்டது. இந்த நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் மொத்தம் 31 எம்.பிக்கள் இடம் பெற்றிருந்தனர். ஆனால் நாடாளுமன்ற கூட்டுக் குழுவில் எதிர்க்கட்சிகள் முன்வைத்த 500-க்கும் மேற்பட்ட பரிந்துரைகள் நிராகரிக்கப்பட்டன; ஆளும் பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகளின் பரிந்துரைகள் மட்டுமே ஏற்கபட்டன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+