இந்தியாவில் சரிந்த கொரோனா பாதிப்பு! சற்றே குறைந்த பலி எண்ணிக்கை! ஆனாலும் ஒரு சிக்கல்! என்ன தெரியுமா?
டெல்லி : இந்தியாவில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வரும் நிலையில், நேற்று முன்தினம் 21,880, நேற்று 20,279ஆக இருந்த கொரோனா பாதிப்பு இன்று 16,866 ஆக குறைந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

கொரோனா பாதிப்பு
மும்பை, டெல்லி போன்ற நகரங்களில் அதிகமாகி வரும் நோய்தொற்று காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையிலும், பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக மொத்த பாதிப்பு எண்ணிக்கை உயர்ந்துள்ளது. சில மாநிலங்களில் நோய் பாதிப்பு எண்ணிக்கையை வெளியிடுவதில் தாமதம் காரணமாகவே நோய் பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கூறிவருகின்றனர்.

திடீர் சரிவு
இந்நிலையில் இந்தியாவில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் சுமார் 20 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில், மீண்டும் பாதிப்பு சிறிது சிறிதாக அதிகரித்து, கடந்த 3 நாட்களாக லேசாக சரிந்து வருகிறது. நேற்று முன்தினமும், நேற்றும் பாதிப்பு 21 ஆயிரத்தை கடந்த நிலையில், இன்று பாதிப்பு வெகுவாகக் குறைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,866 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 39 லட்சத்து 05 ஆயிரத்து 621 ஆக அதிகரித்துள்ளது.

பலி எண்ணிக்கை
அதேபோல் கொரோனா காரணமாக இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் ஒரே நாளில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 5 லட்சத்து 26 ஆயிரத்து 074 ஆக உயர்ந்துள்ளது. சுமார் 10 நாட்களுக்கும் மேலாக கொரோனா மரணங்கள் 50 தாண்டியே பாதிவாகி வருந்துள்ள நிலையில் தற்போது குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது . கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 18 ஆயிரத்து 143 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 32 லட்சட்து 28 ஆயிரத்து 670 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video

தடுப்பூசி அளவு
மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 1 லட்சத்து 50 ஆயிரத்து 877பேர் சிகிச்சை பெற்று வரும் நிலையில், சிகிச்சை பெறுவோர் சிக்கல் அளிக்கும் விதமாக ஒன்றரை லட்சத்திலேயே தொடர்வது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் இதுவரை 202 கோடியே 18 லட்சத்து 4 ஆயிரத்து 701 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் முதல் தவணையாக 102 கோடியே 2 லட்சத்து 93 ஆயிரத்து 346 டோஸ்களும், இரண்டாம் தவணையாக 92 கோடியே 98 லட்சத்து 36 ஆயிரத்து 458 டோஸ்களும், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 7 கோடியே 16 லட்சத்து 74 ஆயிரத்து 897 டோஸ்களும் போடப்பட்டுள்ளது என மத்திய அரசு கூறியுள்ளது.
-
தமிழகத்தில் 3 பவர் சென்டர்களாம்! டெல்லியில் விஜய் கால் வைத்ததும் வந்து விழுந்த விமர்சனம்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications