டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பிக்கலாங்களா? 2 நாள் பதுங்கிய கொரோனா புலி பாய்ச்சல்! இன்றைக்கு மட்டும் இத்தனை பேருக்கு பாதிப்பா?

Google Oneindia Tamil News

டெல்லி : இந்தியாவில் குழப்பம் அளிக்கும் வகையில் கொரோனா பாதிப்பு பதிவாகி வரும் நிலையில், கடந்த இரு நாட்களாக கொரோனா பாதிப்பு சரிவை சந்தித்துள்ள நிலையில் இன்று திடீரென பெரும் எழுச்சியை சந்தித்துள்ளது மருத்துவ நிபுணர்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.

Recommended Video

    கொரோனா பரவல் அதிகரிப்பு.. தமிழக அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் - விஜயபாஸ்கர்

    இந்தியாவில் கொரோனா மூன்றாவது அலையின் தாக்கம் ஜனவரி மாத இறுதியிலும், பிப்ரவரி மாதத் தொடக்கத்திலும் தீவிரமாக இருந்தது. அப்போது குறையத் தொடங்கிய கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் வேகமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

    இந்தியாவில் மட்டுமல்லாது உலகம் முழுவதிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரமாக கையாளப்படாததாலேயே கொரோனா பாதிப்பு மாறி மாறி பதிவாகி வருகிறது.

    தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் 1472 பேர் பாதிப்பு - மீண்டும் லாக்டவுன் வருமா? தமிழகத்தில் வீரியமாக பரவும் கொரோனா...ஒரே நாளில் 1472 பேர் பாதிப்பு - மீண்டும் லாக்டவுன் வருமா?

    கொரோனா பாதிப்பு

    கொரோனா பாதிப்பு

    இந்தியாவைப் பொறுத்தவரை அதிகமாக மும்பை, டெல்லி போன்ற பகுதிகளில் பாதிப்பு மிக அதிகமாக உள்ளது. மேலும் தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு மிகத் தீவிரமாகப் பரவி வரும் நிலையில், சில நாட்களாக பாதிப்பு எண்ணிக்கையில் ஏற்றத்தாழ்வு இருந்து வருகிறது. இந்நிலையில் இரண்டு நாட்களுக்கு முன்பு தினசரி கொரோனா பாதிப்பு 15 ஆயிரம் என்ற அளவில் இருந்த நிலையில், நேற்று 11 ஆயிரத்தைத் தாண்டி பதிவானது. இந்நிலையில்தான் இன்று பாதிப்பு திடீரென எழுச்சியை சந்தித்துள்ளது.

    மீண்டும் உயர்வு

    மீண்டும் உயர்வு

    நேற்று முன்தினம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியான நிலையில் நேற்று 11 ஆயிரத்துக்கு மேலே அதாவது, 11 ஆயிரத்து 739 பேருக்கு உறுதி செய்யப்பட்ட நிலையில், இன்று மீண்டும் அதிகரித்துள்ளது. இன்று 17 ஆயிரத்து 73 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 4 கோடியே 34 லட்சத்து 7 ஆயிரத்து 44 ஆக அதிகரித்துள்ளது.

    பலி எண்ணிக்கை

    பலி எண்ணிக்கை

    கொரோனா காரணமாக 21 பேர் பலியான நிலையில் பலியானோர் எண்ணிக்கை 5 லட்சத்து 25 ஆயிரத்து 20 ஆக உயர்ந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 15 ஆயிரத்து 208 பேர் குணமடைந்துள்ளனர். இதனால், இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 27 லட்சத்து 87 ஆயிரத்து 606 ஆக அதிகரித்துள்ளது.

    தடுப்பூசி அளவு

    தடுப்பூசி அளவு

    மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 94 ஆயிரத்து 420 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 197 கோடியே 1 லட்சத்து 21 ஆயிரத்து 790 டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதில் 101 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரத்து 75 முதல் டோஸ் தடுப்பூசியும், 91 கோடியே 15 லட்சத்து 67 ஆயிரத்து 316 இரண்டாவது டோஸ் தடுப்பூசியும், 4 கோடியே 27 லட்சத்து 17 ஆயிரத்து 399 டோஸ் முன்னெச்சரிக்கை டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

    English summary
    Medical experts are alarmed by the sudden rise in the number of coronaviruses in India, which has been declining for the past two days.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X