இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420 ஆக அதிகரிப்பு: மத்திய அரசு
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420 ஆக அதிகரித்துள்ளது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. கொரோனாவால் நாடு முழுவதும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 12,759 ஆக உயர்ந்துள்ளது.
Recommended Video
இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு தொடர்பான விவரங்களை தற்போது மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 12,380 பேர் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா நோயாளிகளில் 43 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 420 ஆக அதிகரித்திருக்கிறது.

3 ஆயிரத்தை தொடும் மகா.
மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்தம் 2916 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இங்கு உயிரிழந்தோர் எண்ணிக்கையும் 200 ஐ எட்டியுள்ளது. இதுவரை கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 295.

டெல்லி- தமிழ்நாட்டில் தாண்டவம்
டெல்லியில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 32. இம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1578 ஆக அதிகரித்திருக்கிறது. மொத்தம் 25 பேர்தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இங்கு குணமடைந்துள்ளனர். அடுத்ததாக தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் உயிரிழப்பு எண்ணிக்கை 14 ஆகும்.

1,000-த்தை தாண்டிய ராஜஸ்தான்
ராஜஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,000-த்தை தாண்டியிருக்கிறது. 3 பேர் உயிரிழந்த ராஜஸ்தானில் மொத்தம் 1023 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் பாதிப்பு எண்ணிக்கை 1,000-த்தை எட்டுகிறது. மொத்தம் 986 பேர் பாதிக்கப்பட்டும் 53 பேர் உயிரிழந்தும் உள்ளனர்.

உ.பி, தெலுங்கானா
உத்தரப்பிரதேசத்தில் 735 பேரும் தெலுங்கானாவில் 647 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆந்திராவில் 525 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு கூறியுள்ளது. ஆந்திராவில் இதுவரை 14 பேர் மரணமடைந்துள்ளனர். குஜராத்தில் 33 பேர் பலியான நிலையில் அங்கு 766 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 300; தெலுங்கானாவில் 647; மேற்கு வங்கத்தில் 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

கேரளாவில் குணமடைந்தோர் அதிகரிப்பு
ஒடிஷாவில் கொரோனாவால் 60 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 18 பேர் குணமடைந்துள்ளனர் ஒருவர் உயிரிழந்துள்ளார். கேரளாவில் 388 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 218 நலமுடன் வீடு திரும்பியுள்ளனர். கேரளாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 3 மட்டும். ஹரியானாவில் 205 பேர்; கர்நாடகாவில் 279 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Kerala: உடலில் 91 காயங்கள்.. கண்ணை மறைத்த கள்ளக்காதல்.. 1½வயது குழந்தையை துடிக்க துடிக்க கொன்ற கொடூரம்! அதிர்ந்த கேரளா -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
39 வயதில் எழுதிய தேர்வு.. 60 வயதில் வந்த அரசு வேலை.. மஜித்தின் கதை சொல்லும் கசப்பான பாடம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்!












Click it and Unblock the Notifications