டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

வெறும் 8 நாட்களில்.. 5 லட்சம் கேஸ்கள்.. இந்தியாவில் தீவிரம் எடுக்கும் கொரோனா.. ஷாக் புள்ளி விவரம்!

Google Oneindia Tamil News

டெல்லி: இந்தியாவில் கடந்த 8 நாட்களில் மொத்தம் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவின் வேகம் அதிகரித்து இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறது.

இந்தியாவில் கொரோனா பரவும் வேகம் நினைத்ததை விட வேகமாக அதிகரித்து வருகிறது. இந்தியாவில் கொரோனா தொற்றால் 3050326 பேர் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 56883 பேர் பலியாகி உள்ளனர்.

இந்தியாவில் கொரோனாவில் இருந்து இதுவரை 2282356 பேர் குணம் அடைந்தனர். இந்தியாவில் கொரோனா பாதிப்புடன் 7010533 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

என் பேத்தியின் ஓவியங்களே அழுத்தங்களை குறைக்கிறது.. இடைவிடாத கொரோனா பற்றி கேரளா அமைச்சர் ஷைலஜா என் பேத்தியின் ஓவியங்களே அழுத்தங்களை குறைக்கிறது.. இடைவிடாத கொரோனா பற்றி கேரளா அமைச்சர் ஷைலஜா

வேகமாக அதிகரிக்கிறது

வேகமாக அதிகரிக்கிறது

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 70533 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.கடந்த 8 நாட்களில் இந்தியாவில் 5 லட்சம் பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது 25 லட்சத்தில் இருந்து 30 லட்சத்தை தொட வெறும் 8 நாட்களே ஆகியுள்ளது. இதற்கு முன் 5 லட்சம் கொரோனா கேஸ்கள் பெற எடுத்துக் கொண்ட நாட்களை விட குறைவான நாட்களில் இத்தனை கேஸ்கள் வந்துள்ளது.

எத்தனை நாட்கள்

எத்தனை நாட்கள்


அதன்படி முதல் 5 லட்சம் கேஸ்கள் வர 3 மாதம் எடுத்துக் கொண்ட நிலையில், இப்போது வெறும் 8 நாட்களில் 5 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது.

  • 1 லட்சம் கேஸ்கள் - 18-மே மாதம் - 3 மாதங்கள் எடுத்துக்கொண்டது.
  • 5 lakh 26-ஜூன் - 39 நாட்கள் எடுத்துக்கொண்டது.
  • 10 lakh 16-ஜூலை - 20 நாட்கள்எடுத்துக்கொண்டது.
  • 15 lakh 28-ஜூலை - 12 நாட்கள் எடுத்துக்கொண்டது.
  • 20 lakh 6- ஆக்ஸ்ட் - 9 நாட்கள் எடுத்துக்கொண்டது.
  • 25 lakh 14-ஆக்ஸ்ட் - 8 நாட்கள் எடுத்துக்கொண்டது.
  • 30 lakh 22- ஆக்ஸ்ட் - 8 நாட்கள் எடுத்துக்கொண்டது.
நல்ல விஷயம் என்ன

நல்ல விஷயம் என்ன

இதை ஒரே ஒரு நல்ல விஷயம் என்னவென்றால் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் செய்யப்படும் நபர்களின் எண்ணிக்கையும் வேகமாக அதிகரித்து வருகிறது. தினமும் புதிதாக வரும் கேஸ்களில் கிட்டத்தட்ட 90% கேஸ்கள் இன்னொரு பக்கம் டிஸ்சார்ஜ் ஆகிவிடுகிறது. அதாவது 4.2 லட்சம் பேர் கடந்த 8 நாட்களில் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். இதனால் ஆக்டிவ் கேஸ்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது.

பஞ்சாப் எப்படி

பஞ்சாப் எப்படி

இந்தியாவில் தற்போது தினமும் அதிக கேஸ்கள் வரும் மாநிலம் என்றால் அது பஞ்சாப்தான்.அங்கு கொரோனா பாதிப்பு வேகம் 4.41% ஆக உயர்ந்துள்ளது. 7 நாட்களுக்கு ஒருமுறை இந்த சதவிகிதம் அதிகரிக்கிறது. இந்தியா அளவில் கொரோனா பாதிப்பு வெக்கம் 2.34% ஆக உள்ளது. பஞ்சாப்பில் 40063 பேர் வர கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 23 ஆயிரம் பேருக்கு கடந்த 1 மாதத்தில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

மொத்த கேஸ்கள்

மொத்த கேஸ்கள்

மொத்த கேஸ்கள் அடிப்படையில் மகாராஷ்டிரா இன்னும் முதலிடத்தில் உள்ளது.

  • மகாராஷ்டிரா - 671942 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 21995 பேர் பலியாகி உள்ளனர்.
  • தமிழ்நாடு - 373410 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 6420 பேர் பலியாகி உள்ளனர்.
  • ஆந்திர பிரதேசம் - 345216 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 3189 பேர் பலியாகி உள்ளனர்.
  • கர்நாடகா - 271876 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4615 பேர் பலியாகி உள்ளனர்.
  • உத்தர பிரதேசம் - 182456 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 2867 பேர் பலியாகி உள்ளனர்.

English summary
Coronavirus: 5 Lakh number of cases in every day 8 days India, data shows surge in cases.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X