24 மணி நேரத்தில் 89237 பேருக்கு கொரோனா.. சீனாவின் 10 மாத கேஸ்களை ஒரே நாளில் எடுத்த இந்தியா.. ஷாக்!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 89,237 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
உலகிலேயே இதுவரை இல்லாத அளவிற்கு இந்தியாவில் ஒரே நாளில் அதிக கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. எந்த நாட்டிலும் ஒரே நாளில் 89 ஆயிரம் கேஸ்கள் இதுவரை பதிவானது இல்லை. இந்தியாவில் தற்போது தினமும் 80 ஆயிரத்திற்கும் அதிகமாக கேஸ்கள் பதிவாகி வருகிறது.
கடந்த 10 நாட்களில் கிட்டத்தட்ட 8 லட்சம் கொரோனா கேஸ்கள் இந்தியாவில் பதிவாகி உள்ளது. புதிய கேஸ்களில் எண்ணிக்கையில் இந்தியாதான் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது.

என்ன வேகம்
சீனாவில் மொத்தமாக 10 மாதங்களில் பதிவான கேஸ்களின் எண்ணிக்கை 85,112. சீனாவில் 10 மாதங்களில் பதிவான கேஸ்களை விட ஒரே நாளில் இந்தியாவில் அதிக பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. அதாவது சீனாவில் கொரோனா ஏற்பட தொடங்கி இப்போது வரை பதிவான கேஸ்களை விட அதிக கேஸ்கள் இந்தியாவில் ஒரே நாளில் பதிவாகி உள்ளது.

நிலைமை மோசம்
இந்தியாவில் தற்போது 4,109,476 லட்சம் பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 70,673 கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். 3,177,667 பேர் கொரோனாவில் இருந்து விடுபட்டு டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,038 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் தற்போது ஆக்டிவ் கொரோனா கேஸ்களாக 861,136 லட்சம் பேர் இருக்கிறார்கள்.

10 நாட்கள்
கடந்த 25ம் தேதி இந்தியாவில் 3231754 கொரோனா கேஸ்கள் மட்டுமே இருந்தது. தற்போது 10 நாட்களில் 8 லட்சம் கேஸ்கள் வந்துள்ளது. அதேபோல் 12 நாட்களில் இந்தியாவில் 1 மில்லியன் கேஸ்கள் வந்துள்ளது. உலகிலேயே குறைவான நாட்களில் (12 நாட்கள்) 1 மில்லியன் கேஸ்கள் வந்த ஒரே நாடு இந்தியாதான். அமெரிக்காவில் கூட அதிகபட்சமாக ஒரே நாளில் 60000+ கேஸ்கள் மட்டுமே இதுவரை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முதலிடம் பிடிக்கும்
கொரோனா கேஸ்களின் எண்ணிக்கையில் இந்தியா தற்போது இரண்டாம் இடம் வகிக்கிறது. இந்தியாவில் இதே வேகத்தில் கொரோனா கேஸ்கள் அதிகரித்தால் விரைவில் இந்தியா அமெரிக்காவை முந்தி முதல் இடம் பிடித்துவிடும். 6,410,295 பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவை விட 24 லட்சம் பேர் அமெரிக்காவில் கொரோனா காரணமாக கூடுதலாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

அடுத்தடுத்த இடம்
அமெரிக்காவில் சராசரியாக தினமும் 21000+ கேஸ்கள் மட்டுமே வருகிறது. இந்தியாவிற்கு அடுத்தப்படியாக பிரேசிலில் 4,093,586 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக ரஷ்யாவில் 1,020,310 பேர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications