டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

குடலிலும் ஏற்படும் ரத்தக்கட்டு.. அழுகும் திசு.. கொரோனா நோயாளிகள் கவனம்.. மருத்துவர்கள் எச்சரிக்கை

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட சிலருக்கு தற்போது குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளிலும் ரத்த கட்டு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். இதன் காரணமாக திசு அழுகும் குறைபாடு ஏற்படலாம் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு 2019ல் எப்போது பரவ தொடங்கியதோ அப்போதே அதோடு பல கிளை நோய்களும்,பாதிப்புகளும் பரவ ஆரம்பித்துவிட்டது. முக்கியமாக இந்த கொரோனா பரவல் காரணமாக தொடக்கத்தில் நாள்பட்ட நுரையீரல் பாதிப்பு, இதய பாதிப்பு, பாலியல் நாட்டமின்மை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்பட்டது.

தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்! தஞ்சை மருத்துவமனைக்கு ரூ.1 கோடியில் ஆக்சிஜன் நிலையம்.. நன்றி தெரிவித்த அமைச்சர் அன்பில் மகேஷ்!

ஆனால் புதிய புதிய உருமாறிய கொரோனா வைரஸ் தோன்ற தோன்ற புது விதமான நோய்களும், கிளை பாதிப்புகளும் ஏற்படுகின்றன.

கொரோனா

கொரோனா

சமயங்களில் கொரோனா பரவலால் ஏற்படும் ஆக்சிஜன் குறைபாடு, சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா ஏற்படுதல், அதீத ஸ்டிராய்டு பயன்பாடு போன்ற விஷயங்களும் பிளாக் பங்கஸ் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. மஞ்சள், பச்சை, கருப்பு என்று மூன்று வண்ணங்களில் பூஞ்சை நோய்கள் ஏற்கனவே பரவி வருகிறது. இது போக பல வித ரத்த கட்டு பிரச்சனைகளும் ஏற்படுகின்றன.

 நரம்புகள்

நரம்புகள்

முக்கியமாக கை, கால்கள், இதயத்திற்கு செல்லும் நரம்புகளில் ரத்த கட்டு பிரச்சனைகள் ஏற்பட்டு வருகின்றன. இந்த நிலையில் தற்போது கூடுதலாக குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளிலும் ரத்த கட்டு ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். குடல் மற்றும் ஜீரண உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளில் ரத்த கட்டு ஏற்பட்டு கொரோனா நோயாளிகள் பலர் மருத்துவமனையில் சேர தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    குழந்தைகளுக்கு Corona வருமா? Symptoms என்னென்ன? | Doctor Srinivasan | Oneindia Tamil
    மும்பை

    மும்பை

    மும்பையில் 10-12 பேர் கடுமையான வயிற்று வலியோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதோடு 16-30% கொரோனா நோயாளிகளுக்கு வயிறு தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் புள்ளி விவரம் தெரிவித்துள்ளது. சிறுகுடலில் ஏற்படும் ரத்த கட்டு காரணமாக Acute mesenteric ischemia (AMI) எனப்படும் பாதிப்பும் ஏற்படுகிறது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இது குடலில் ஏற்படும் பாதிப்பு ஆகும். சிறுகுடலில் ரத்த கட்டு ஏற்பட்டு, அது கவனிக்கப்படாமல் போனால் AMI ஏற்படலாம். இது வயிற்றுப்பிரச்சனைகளை ஏற்படுத்தும் கடினமான வயிற்று வலியை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர். இந்த ரத்த கட்டை கவனிக்காமல் போனால் அது உடல் திசுக்கள் அழுகும் நிலையை ஏற்படுத்தும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.

    திசு

    திசு

    gangrene எனப்படும் திசு அழுகும் பிரச்சனை இதனால் ஏற்படும். வயிற்றில் இருக்கும் உறுப்புகள் இதனால் அழுகிப்போக வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர். இது உயிருக்கே கூட ஆபத்தாகும் என்றும் கூறுகிறார்கள். கொரோனா தொடர்பாக பல கிளை நோய்கள் பாதிப்புகள் ஏற்படுவதால் இது தொடர்பாக ஆராய்ச்சிகளை ஐசிஎம்ஆர் அதிகரித்துள்ளது. அதோடு இது தொடர்பாக தனிப்பட்ட ஆராய்ச்சி மேற்கொண்டவர்கள் அரசுக்கு உதவலாம் என்றும் ஐசிஎம்ஆர் அழைப்பு விடுத்துள்ளது.

    English summary
    Coronavirus can cause blood clot in intestine may lead to deadly gangrene warns doctors.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X