இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியது
டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20 ஆயிரத்தை தாண்டியுள்ளதாக www.covid19india.org புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
இதன்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 20,080 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 645 ஆகவும் அதிகரித்திருக்கிறது.
மேலும் மொத்தம் 3,975 பேர் குணமடைந்துள்ளதாகவும் covid19india.org தெரிவித்துள்ளது. மாநிலங்களில் மகாராஷ்டிராவில் மிக அதிக அளவாக இன்று ஒரே நாளில் 552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா, டெல்லி
இதனையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 5218 ஆகவும் உயிரிழந்தோர் எண்ணிக்கை 251 ஆகவும் உள்ளது. டெல்லியில் மேலும் 76 பேருக்கு கொரோனா தொற்று இன்று உறுதி செய்யப்பட்டது. அங்கு மொத்தம் 2156 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

குஜராத்தில் உக்கிரம்
குஜராத்தில் இன்று ஒரே நாளில் 239 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டது; இதனால் பாதித்தோர் எண்ணிக்கை 2178 ஆகவும் உயர்ந்துள்ளது. குஜராத்தில் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 100ஐ எட்டுகிறது. குஜராத்தில் 139 பேர் குணமடைந்துள்ளதாகவும் புள்ளி விவரங்கள் சுட்டி காட்டுகின்றன.

ம.பி. தமிழகம்
80 பேரை பலி கொண்ட மத்திய பிரதேசத்தில் 1552 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி இருக்கிறது. தமிழகத்தில் இன்று 76 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 1596 ஆக உள்ளது. ராஜஸ்தானில் மேலும் 83 பேருக்கு கொரோனா உறுதியானது. இதனால் அங்கும் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1659 ஆகி உள்ளது.

கேரளாவில் மேலும் 19 பேர்
உத்தரப்பிரதேசத்தில் 110 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்தம் 1294 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கேரளாவில் இன்று 19 பேருக்கு உறுதி செய்யப்பட்டதால் அம்மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 426 ஆனது. கர்நாடகாவில் மொத்தம் 418 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டிருக்கிறது. தெலுங்கானாவில் 928 பேரும் ஆந்திராவில் 757 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.
-
நடுக்கடலில் தத்தளித்த இந்தியர்கள்.. அடுத்த நொடி அமெரிக்க செய்த காரியம்.. மீண்டும் மீண்டுமா.! -
சீனா, பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த இந்தியா! 2 நாட்களில்.. 3 ஏவுகணை சோதனைகள்! DRDO அசத்தல்! -
இந்திய மாலுமிகள் மீது அட்டாக்! அமெரிக்க வெளியுறவு செயலாளரை கூப்பிட்டு கண்டனம் தெரிவித்த மத்திய அரசு! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
தாய்லாந்திலிருந்து காஸ்ட்லி கஞ்சா கடத்திய கேரள அழகி கைது! ரூ 11 கோடி மதிப்பில் போதை பொருள் பறிமுதல் -
யாரோட பிடிலையும் திருவண்ணாமலை கிடையாது.. செய்யாறில் ஆதவ் அர்ஜுனா பேசியது என்ன? -
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி












Click it and Unblock the Notifications