கொரோனா.. வதந்திகளை பரப்பினால் ஓராண்டு சிறை.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: கொரோனா வேகமாக பரவி வரும் நிலையில் பொய்யான செய்திகளை பரப்பும் நபர்களுக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கொரோனா தடுப்பு நடவடிக்கைக்காக இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. நேற்றோடு முடிய வேண்டிய ஊரடங்கு மே 3 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாடுகள் தொடர்பான விதிமுறைகள் இன்று வெளியிடப்பட்டது.

Coronavirus: Circulating fake news will land you in Jail for 1 year says MHA

இதில் வதந்திகளை பரப்பும் நபர்களுக்கு முக்கியமான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பின் 11ம் பக்கத்தில், ஊரடங்கு நடவடிக்கைகளை மீறிய குற்றங்கள் மற்றும் அபராதங்கள் என்ற பகுதி இடம்பெற்றுள்ளது.

அதில் அரசு அதிகாரிகளை தடுப்பது, வீட்டை விட்டு தேவையில்லாத காரணங்களுக்காக வெளியே வந்து சுற்றுவது குற்றம் என்று விவரிக்கப்பட்டுள்ளது. அதேபோல் பொய்யான செய்திகள், வதந்திகள், பொய்யான தகவல்களை உருவாக்கினால், இணையத்தில் பரப்பினால் குற்றம் என்று வரையறுக்கப்பட்டுள்ளது .

மக்களை பயமுறுத்தும் வகையிலும், குழப்பும் வகையிலும் செய்திகளை பரப்பும் நபர்கள் உடனே கைது செய்யப்படுவார்கள். இவர்களுக்கு ஒருவருடம் வரை சிறைத்தண்டனை அளிக்கப்படும் அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Recommended Video

    Fake News Buster : எஸ்பிஐ வங்கியின் AePS பண பரிவர்த்தனையை ஆர்பிஐ முடக்கியதா?

    தங்களுக்கு தெரிந்தே பொய்யான செய்திகளை பரப்பும் நபர்கள், இது பொய்யான தகவல் என்று தெரிந்து அதை வெளியிடும் நபர்கள் மீது இந்த நடவடிக்கை பாயும். அதேபோல் காசுக்காக, அரசியல் ஆதாயத்திற்காக அல்லது வேறு விதமான ஆதாயத்திற்காக இப்படி பொய்யான செய்திகளை பரப்பினால் அவர்களுக்கு இரண்டு ஆண்டு வரை சிறை அல்லது அபராதம் விதிக்கப்படும் என்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+