நல்ல செய்தி.. கொரோனா இறப்பு விகிதம்.. தமிழகத்தில் மிக மிக குறைவு.. எந்த மாநிலத்தில் அதிகம் தெரியுமா?
டெல்லி: இந்தியாவில் தமிழகத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் மிக குறைவாக பலியாகிறார்கள். தமிழகத்தில் பலி சதவிகிதம் குறைவாக உள்ளது.
இந்தியாவில் மொத்தம் 53057 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. இந்தியாவில் கடந்த சில வாரங்களாக வேகமாக அதிகரித்த கொரோனா எண்ணிக்கை தற்போது 50 ஆயிரத்தை தாண்டியுள்ளது.
இந்தியாவில் கடந்த 4 மாதங்களில் கொரோனா காரணமாக 1787 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவின் இறப்பு விகிதம் 3.3% ஆக உள்ளது. கடந்த 3 நாட்களில் மட்டும் 10000 பேருக்கு இந்தியாவில் கொரோனா ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாடு நிலை
தமிழ்நாட்டில் மொத்தம் 4829 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 35 பேர் பலியாகி உள்ளனர். தமிழகத்தில் இறப்பு சதவிகிதம் வெறும் 0.72% மட்டுமே ஆகும். தமிழகத்தில்தான் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்கள் மிக குறைவாக பலியாகிறார்கள். தமிழகத்தில்தான் இறப்பு சதவிகிதம் குறைவாக உள்ளது. மகாராஷ்டிராவில் 16758 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 651 பேர் பலியாகி உள்ளனர். மகாராஷ்டிராவில் இறப்பு சதவிகிதம் 3.88% மட்டுமே ஆகும்.

டெல்லி எப்படி
டெல்லியில் 5532 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 65 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் இறப்பு சதவிகிதம் வெறும் 1.17% மட்டுமே ஆகும். குஜராத்தில் 6625 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 396 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் இறப்பு சதவிகிதம் 5.98% மட்டுமே ஆகும். இந்தியாவில் பலி சதவிகிதம் அதிகமாக இருக்கும் மாநிலங்களில் குஜராத் முதல் இடம் வகித்தது தற்போது கேஸ்கள் அதிகமான காரணத்தால் இரண்டாம் இடம் சென்றுள்ளது.

உத்தர பிரதேசம் நிலை
உத்தர பிரதேசத்தில் 2998 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 60 பேர் பலியாகி உள்ளனர். உத்தர பிரதேசத்தில் இறப்பு சதவிகிதம் 2% மட்டுமே ஆகும். மத்திய பிரதேசத்தில் 3138 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 185 பேர் பலியாகி உள்ளனர். மத்திய பிரதேசத்தில் இறப்பு சதவிகிதம் 5.90% மட்டுமே ஆகும்.தெலுங்கானாவில் 1107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் பலியாகி உள்ளனர். தெலுங்கானாவில் இறப்பு சதவிகிதம் 2.62% மட்டுமே ஆகும்.

ஆந்திர பிரதேசம்
ஆந்திராவில் 1777 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 36 பேர் பலியாகி உள்ளனர். ஆந்திர பிரதேசத்தில் இறப்பு சதவிகிதம் 2.03% ஆகும். கேரளாவில் 503 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேர் பலியாகி உள்ளனர். கேரளாவில் இறப்பு சதவிகிதம் வெறும் 0.80% மட்டுமே ஆகும். தமிழகம் கேரளவையை விட நல்ல நிலையில் உள்ளது . கர்நாடகாவில் 693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 29 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகாவில் இறப்பு சதவிகிதம் 4.18 % மட்டுமே ஆகும்.

மேற்கு வங்கம் எப்படி
இந்தியாவில் மிக மோசமான பலி எண்ணிக்கை சதவிகிதம் கொண்ட மாநிலம் என்றால் அது மேற்கு வங்கம்தான். மேற்கு வங்கத்தில் 1456 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 144 பேர் பலியாகி உள்ளனர். மேற்கு வங்கத்தில் இறப்பு சதவிகிதம் 9.89% மட்டுமே ஆகும். அங்கு இன்னும் பலர் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று கருதப்படுவதால் இந்த சதவிகிதம் அதிகரிக்கும் என்கிறார்கள்.












Click it and Unblock the Notifications