இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 422- INDIA COVID-19 TRACKER

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 422 ஆக உயர்ந்துள்ளது என்று INDIA COVID-19 TRACKER புள்ளி விவரம் தெரிவிக்கிறது.

Recommended Video

    ஆசியாவிலேயே இந்தியா தான் மோசம்... அதிர வைக்கும் புள்ளி விவரங்கள்

    INDIA COVID-19 TRACKER புள்ளி விவரப்படி மகாராஷ்டிராவில் கொரோனாவால் மொத்தம் 187 பேர் பலியாகி உள்ளனர். நேற்று ஒரே நாளில் இம்மாநிலத்தில் 9 பேர் மரணமடைந்துள்ளனர்.

    Coronavirus death toll in India rises to 422 : INDIA COVID-19 TRACKER

    மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3 ஆயிரத்தை எட்டுகிறது. இங்கு நேற்று ஒரே நாளில் 232 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2916 ஆக அதிகரித்திருக்கிறது.

    மகாராஷ்டிராவைத் தொடர்ந்து அதிக மரணங்கள் நிகழ்ந்திருப்பது மத்திய பிரதேசத்தில்தான். இம்மாநிலத்தில் கொரோனாவுக்கு 53 பேர் உயிரிழந்துள்ளனர். மத்திய பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 938 ஆக உயர்ந்திருக்கிறது.

    தமிழகத்தில் நேற்று 38 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து பாதிக்கப்பட்டிருப்போர் எண்ணிக்கை 1242 ஆக அதிகரித்தது. தமிழகத்தில் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 14. பஞ்சாப் மாநிலத்தில் 13 பேர் பலியான போதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 186 மட்டுமே.

    உத்தரப்பிரதேசத்தில் 735; தெலுங்கானாவில் 650; கேரளாவில் 387; ஜம்மு காஷ்மீரில் 300; குஜராத்தில் 766; ஆந்திராவில் 525; கர்நாடகாவில் 279 பேர் என கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஒடிஷாவில் கொரோனாவில் 60 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 20 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர்.

    மேற்கு வங்க மாநிலத்தில் கொரோனாவால் 7 பேர் பலியான நிலையில் மொத்தம் 213 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இந்தியாவில் மொத்தம் 422 பேர் கொரோனாவால் பலியாகி உள்ளனர் என்றும் 12,370 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர் என்றும் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரம் கூறுகிறது.

    சுகாதாரத்துறை

    மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் கணக்கின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11933, பலியானோ எண்ணிக்கை 392 என்பது குறிப்பிடத்தக்கது.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+