இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் ஏற்படும் மரணங்கள் எண்ணிக்கை 450 ஐ நெருங்குவதாக INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் கொரோனாவால் இதுவரை 420 பேர் பலியாகி உள்ளனர் என்கிறது மத்திய சுகாதாரத் துறை அமைச்சகப் புள்ளி விவரம். இந்தியாவில் கொரோனா மரணங்கள் 450 ஐ நெருங்குகிறது- INDIA COVID-19 TRACKER இன் புள்ளி விவரங்கள் சற்று மாறுபட்டவையாக உள்ளன.

Coronavirus death toll reaches to 450 : INDIA COVID-19 TRACKER

அதில், கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 13,430 ஆக உயர்ந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3, 202 ஆக அதிகரித்துள்ளது.

டெல்லியில் 1,640; தமிழகத்தில் 1,267; ராஜஸ்தானில் 1,131 மத்திய பிரதேசத்தில் 1,164 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மகாராஷ்டிராவில் பலி எண்ணிக்கை 200ஐ நெருங்கியுள்ளது. மொத்தம் 194 பேர் இங்கு மரணமடைந்துள்ளனர்.

இதனையடுத்து மத்திய பிரதேசத்தில் 55 பேரும் குஜராத்தில் 36 பேரும் தமிழகத்தில் 15 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். பஞ்சாப்பில் 14 பேரும் உ.பி.யில் 13 பேரும் கொரோனா தொற்று நோயால் மாண்டு போயுள்ளனர்.

இந்தியாவில் தற்போதைய நிலையில் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 448 என்கிறது INDIA COVID-19 TRACKER .

கொரோனா

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+