டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

கொரோனாவால் டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்- ஷாஹின் பாக் போராட்டம் ஒத்திவைப்பு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவாமல் தடுக்க டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் ஷாஹின் பாக்கில் நடைபெற்ற 101 நாட்கள் போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Recommended Video

    Let's all stay home and stay safe Surya About Janata Curfew | Janata Curfew

    மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தமான சி.ஏ.ஏ.வுக்கு எதிராக டெல்லி ஷாஹின் பாக் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். ஒரே இடத்தில் அமர்ந்து தொடர்ந்து போராட்டம் நடத்தும் இந்த அணுகுமுறை நாடு முழுவதும் பரவியது.

    Coronavirus: Delhi Police clears Shaheen Bagh area

    ஷாஹின் பாக் பாணி போராட்டங்களை சி.ஏ.ஏ. எதிர்ப்பாளர்கள் நாடு முழுவதும் முன்னெடுத்தனர். டெல்லி ஷாஹின் பாக் போராட்டத்தைக் கலைக்க பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. நீதிமன்றத்தையும் நாடப்பட்டது.

    ஷாஹின் பாக் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச் சூடு, பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. ஆனாலும் ஷாஹின் பாக்கில் பெண்கள் அமைதிவழியில் போராட்டம் நடத்தினர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் தொற்று நாடு முழுவதும் பரவியது.

    கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமாக தீவிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை கொரோனா வைரஸின் தாக்கம் மிக உக்கிரமாக தீவிரமடைகிறது: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

    இதனால் டெல்லி ஷாஹின் பாக் போராட்டக்காரர்கள் ஒரே இடத்தில் போதுமான இடைவெளிவிட்டு அமர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொரோனாவை தடுக்க டெல்லியில் 144 தடை உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால் டெல்லி ஷாஹின் பகுதியில் நடைபெற்று வந்த போராட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

    இதனையடுத்து அப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு அமைக்கப்பட்டிருந்த பந்தல் உள்ளிட்ட தடுப்புகளை அகற்றி சாலைகளை சீரமைத்தனர்.

    English summary
    Delhi Police clears the protest site in Shaheen Bagh area, amid complete lockdown.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X