இந்தியாவில் கொரோனா... 24 மணி நேரத்தில் 60000 பதிவு... உயிரிழப்பு 933!!
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா தொற்று 60000த்தை கடந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையும் 933 ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் இதுவரை கொரோனாவுக்கு 42,578 பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு 6,19,088 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு பாதித்தவர்களின் எண்ணிக்கை 20,88,61த்தை தொட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 61,537 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் இருந்து மீண்டு வந்தவர்களின் எண்ணிக்கை 13,78,105 ஆக அதிகரித்துள்ளது. இந்த நோயால் பாதிக்கப்பட்டு மீண்டு வருபவர்களின் சதவீதம் 67.62% ஆக உயர்ந்துள்ளது.

தொடர்ந்து ஒன்பதாவது நாளாக கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 50,000த்தையும் கடந்து சென்றுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 933 உயிரிழந்து, இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 42,578 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் மொத்தம் இதுவரை 2,33,87,171 கொரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டு இருப்பதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது. நேற்று ஒரே நாளில் மட்டும் 5,98,778 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் ஐந்து மாநிலங்களில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகளவில் பதிவாகி வருகிறது. மகாராஷ்டிராவில் 4,90,262 பேரும், தமிழ்நாட்டில் 2,79,144 பேரும், ஆந்திரப்பிரதேசத்தில் 2,06,000 பேரும், கர்நாடகாவில் 1,58,254 பேரும், டெல்லியில் 1,42,723 பேரும் இந்த தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் மீண்டும் வந்துள்ளனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
“இந்திய எல்லையை ஆக்கிரமித்திருக்கிறோம்..” நேபாள பிரதமரின் பேச்சால் உள்நாட்டில் வெடித்த சர்ச்சை! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications