கொரோனா பலி 72; மொத்த பாதிப்பு- 2,536; மகாராஷ்டிரா 423; தமிழகம்- 309; டெல்லி- 293 பேர் பாதிப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு கிடுகிடுவென உயர்ந்து 2,512ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 70 ஆகவும் உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் 423 பேரும் தமிழகத்தில் 309 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Recommended Video

    டெல்லியில் நடைபெற்ற கூட்டம்... பலருக்கு கொரோனா பாதிப்பு... என்ன நடந்தது?

    இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை படுவேகமாக அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலையில் நாடு முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,536 ஆக அதிகரித்திருக்கிறது.

    மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தெலுங்கானாவில் அதிகபட்சமாக 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 127 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் குணமடைந்தனர். 109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் 87 பேரும் மத்திய பிரதேசத்தில் 100 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 8 பேரும் குஜராத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

    மகாராஷ்டிராவில் 19 பேர் பலி

    மகாராஷ்டிராவில் 19 பேர் பலி

    மகாராஷ்டிராவில் கொரோனாவால் 416 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 42 பேர் இதுவரை குணமடைந்துள்ளனனர். 355 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நாட்டிலேயே அதிக அளவாக மகாராஷ்டிராவில்தான் 19 பேர் மரணமடைந்துள்ளனர். மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.

    2-வது இடத்தில் தமிழகம்

    2-வது இடத்தில் தமிழகம்

    தமிழகத்தில் கொரோனாவால் 309 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இன்று ஒரே நாளில் 75 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. கேரளா மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 286 ஆக உள்ளது. இதுவரை 28 பேர் கொரோனா சிகிச்சை பெற்று நலமடைந்துள்ளனர். இன்னமும் 256 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் வருகின்றனர். கேரளாவில் கொரோனாவுக்கு 2 பேர் இதுவரை பலியாகி உள்ளனர்.

     டெல்லியில் 293 பேர்

    டெல்லியில் 293 பேர்

    டெல்லியில் 293 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 4 பேர் டெல்லியில் பலியாகி உள்ளனர். 6 பேர் டெல்லியில் குணமடைந்த நிலையில் 283 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    5 மாநிலங்களில் பாதிப்பு 100க்கும் அதிகம்

    5 மாநிலங்களில் பாதிப்பு 100க்கும் அதிகம்

    ராஜஸ்தான், உ.பி,, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 100க்கும் அதிகம். ராஜஸ்தானில் 133; உ.பி.யில் 121; ஆந்திராவில் 143; கர்நாடகாவில் 124 பேர் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். உ.பி.யில் 2 பேரும் கர்நாடகாவில் 3 பேரும் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். ராஜஸ்தான், ஆந்திராவில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை. மத்திய பிரதேசத்தில் 107 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    தெலுங்கானாவில் 9 பேர் பலி

    தெலுங்கானாவில் 9 பேர் பலி

    மகாராஷ்டிராவைத் தொடர்ந்து தெலுங்கானாவில் அதிகபட்சமாக 9 பேர் கொரோனாவுக்கு உயிரிழந்துள்ளனர். கொரோனாவால் 127 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 14 பேர் குணமடைந்தனர். 109 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். குஜராத்தில் 87 பேரும் மத்திய பிரதேசத்தில் 100 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மத்திய பிரதேசத்தில் 8 பேரும் குஜராத்தில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.

     மேற்கு வங்கத்தில் 6 பேர் உயிரிழப்பு

    மேற்கு வங்கத்தில் 6 பேர் உயிரிழப்பு

    கொரோனாவால் மேற்கு வங்கத்தில் 6 பேர் பலியாகி உள்ளனர். இம்மாநிலத்தில் 53 பேர் கொரோனா பாதிப்புக்குள்ளாகினர். பஞ்சாப்பில் 4 பேர் கொரோனாவால் உயிரிழந்தனர். இங்கு 47 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஜம்மு காஷ்மீரில் 70, ஹரியானாவில் 49, பீகாரில் 24 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+