கொரோனாவால் இந்தியாவில் சுனாமி போல பேரழிவு அபாயம்.. விஞ்ஞானிகள் கடும் வார்னிங்
டெல்லி: கொரோனா பாதிப்பு இந்தியாவில் அதிகரிக்கும் வேகத்தால் சீனா, இத்தாலி போன்ற ஒரு பேரழிவு ஏற்படும் அபாயம் உள்ளதாக விஞ்ஞானிகள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் கடந்த சில நாட்களாக மிக மிக அதிகமாக, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. உலகின் பிற நாடுகளில் தொடக்கத்தில் மந்தமாக இருந்த கொரோனா பாதிப்பு திடீரென படுவேகமாக உயர்ந்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை பலி கொண்டது.

பாதிப்பு 2 மடங்காகும்
தற்போது இந்தியாவில் கொரோனாவின் தாக்கமும் இதேபோன்ற மிகப் பெரிய பேரழிவை நோக்கியதாகவே இருக்கிறது என்கின்றனர் விஞ்ஞானிகள். மார்ச் 1-வது வாரத்தில் சொற்ப எண்ணிக்கையில் இருந்த கொரோனா பாதிப்பு தற்போது 300ஐ நெருங்கியுள்ளது. இனிவரும் அடுத்த 2 வாரங்களிலேயே இது 2 மடங்காக அதிகரிக்கும் என்கின்றனர் விஞ்ஞானிகள்.

8 நாட்களில் பல மடங்கு
சென்னை தரமணியில் இயங்கி வரும் கணித அறிவியல் ஆய்வு மையத்தைச் சேர்ந்த பேராசிரியர் சிதப்ரா சின்ஹா இது தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். கொரோனா தாக்கம் குறித்து கருத்து தெரிவித்த அவர், மார்ச் மாதம் இறுதியில் இந்தியாவில் கொரோனாவின் தாக்கம் 1,000ஐ தொட்டுவிடும் என எச்சரித்திருக்கிறார். ஆகையால் அரசு உரிய முன்னேற்பாடுகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றனர் விஞ்ஞானிகள்.

சுனாமி போல பேரழிவு
பிபிசி செய்தி ஊடகத்துக்குப் பேட்டியளித்த மருத்துவர் ரமணன் லக்ஷ்மி நாராயணன், இந்தியாவில் கொரோனாவால் 30 கோடி பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என எச்சரித்திருக்கிறார். மேலும், கொரோனா தொற்றுநோய் தீவிரம் அடைவதில் இந்தியா தற்போது பின் தங்கியிருக்கிறது. ஆனால் ஸ்பெயின் உள்ளிட்ட பிறநாடுகளைப் போல சுனாமியைவிட விஸ்வரூபமெடுக்கும் இந்த கொரோனா தாக்கம்.

தற்காலிக மருத்துவமனைகள்
இந்தியாவில் குறைந்தபட்சம் 20% பேருக்கு கொரோனா பாதிப்பு என கணக்கு வைத்தால் கூட 30 கோடி பேர் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இந்தியாவின் தற்போதைய சுகாதார அமைப்பு இதனை சமாளிக்கும் வகையிலும் இல்லை. தற்காலிக மருத்துவமனைகளை உடனடியாக அமைத்து நிலைமையை சீரியசாக எதிர்கொள்ள வேண்டும் என எச்சரித்திருக்கிறார். குறிப்பாக வரும் 3 வாரங்களில் என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப் போகிறோம் என்பதைப் பொறுத்தே கொரோனாவின் தாக்கத்தை நாம் எதிர்கொள்ள முடியும் என்றும் அவர் எச்சரித்திருக்கிறார்.












Click it and Unblock the Notifications