இனியும் "கம்யூனிட்டி பரவல்" இல்லைன்னு சொன்னா அது அபத்தம்.. சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கை

இந்தியாவில் சமூக பரவல் இல்லை என்பது அபத்தம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்

Subscribe to Oneindia Tamil

புதுடெல்லி: "கொரோனா பாதிப்பு 3 லட்சத்தை நெருங்கி விட்டது. இந்த நிலையிலும், திரும்ப திரும்ப சமூக பரவல் இந்தியாவில் இல்லை என்று சொல்வது அபத்தமானது... வேஸ்ட்" சுகாதார நிபுணர்கள் குரல் எழுப்ப தொடங்கி உள்ளனர்.

Recommended Video

    Scientists Suspect Community Transmission existed - Scientists

    இந்தியாவில் இப்போது கொரோனா வைரசின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. .. உயிரிழப்புகளும், பாதிப்புகளும் அதிகமாகி கொண்டே இருக்கின்றன.

    மிகப் பெரிய அளவிலான பாதிப்பை நாடு சந்தித்துக் கொண்டிருக்கிறது. எல்லா மாநிலத்திலும் பாதிப்புகள் அதிரிக்கின்றன. கேரளாவிலும் பாதிப்பு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போகிறது.

     வைரஸ்

    வைரஸ்

    மத்திய அரசு பல்வேறு சீரிய முயற்சிகளை எடுப்பதையும், தொற்று பரவாமல் இருக்க போராடி வருவதையும் மறுப்பததற்கில்லை.. ஆனாலும் கொரோனா வைரஸ் இன்னும் சமூக பரவலாக மாறவில்லை என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் சுட்டி காட்டி உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் ஏற்கனவே தெரிவித்து இருந்தது.

    பாதிப்பு

    பாதிப்பு

    இந்த சமூக பரவல் நிலை என்பது, தொற்று பாதிப்புக்கு ஏற்பட்டவர்களுடன் தொடர்பில் இல்லாதவர்களும், தொற்று உள்ள நாடுகளுக்கு செல்லாதவர்களும், பாதிக்கப்படும் நிலையாகும்... இதுதான் சமூக பரவல்.. அதன்படி பாதிக்கப்பட்ட நபருக்கு, தொற்று யாரிடமிருந்து, எங்கிருந்து உருவானது என்பதையே கண்டறிய முடியாத அபாயமான நிலை.. ஆனால், நாளுக்கு நாள் பாதிப்பு அதிகமாக இருந்தபோதும், இந்த நிலைக்கு ,இந்தியா இன்னும் வரவில்லை என்றே மத்திய அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

     சுகாதாரத்துறை

    சுகாதாரத்துறை

    ஆனால் தொற்றுநோயியல் நிபுணர்களும், சுகாதார நிபுணர்களும் வேறு கருத்தை ஆணித்தரமாக எடுத்து வைக்கிறார்கள்.. அதாவது இந்தியாவில் ஏப்ரல் மாதமே சமூகப் பரவல் தொடங்கியிருக்கக் கூடும். தற்போது பாதிப்பு அதிகரித்துக் கொண்டு போகிறது. இனியும் சமூக பரவல் இந்தியாவில் இல்லை என்று சொல்வது அபத்தமானது என்கிறார்கள்.. சமூக பரவலை மத்திய அரசு மீண்டும் மீண்டும் மறுப்பது பயனற்றது என்றும் வழக்குகளின் உயர்வை குறைப்பது எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தும் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர்.

     கட்டுப்பாடுகள்

    கட்டுப்பாடுகள்

    உலகின் மிக நீண்ட லாக்டவுனை இந்தியா எதிர்கொண்டுள்ளது. மார்ச் மாதத்திலிருந்தே லாக்டவுன் அமலில் இருந்து வருகிறது. கட்டுப்பாடுகளும் கடுமையாகவே அமல்படுத்தப்பட்டன. அதன் பின்னர்தான் தளர்வுகளை அரசு அறிவித்தது. ஆனால் இத்தனை செய்தும் கூட பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கி விட்டது.

     சமூக பரவல்

    சமூக பரவல்

    கடந்த புதன்கிழமை நிலவரப்படி நாட்டில் மொத்தம் 2,76,583 கேஸ்கள் பதிவாகியுள்ளன. . அவைகளில் 1,33,632 பேர் சிகிச்சையில் உள்ளன். 1,35,206 பேர் டிஸ்சார்ஜ் ஆகி சென்றுவிட்டனர்.. 7,745 பேர் இந்த தொற்று காரணமாக இறந்துள்ளனர்.. மத்திய அரசின் கணக்கீட்டின்படி, ஹாட்ஸ்பாட் மாவட்டங்களில் 15-30% மக்கள் தொகையில் கோவிட் -19 பரவக் கூடும் என்று கண்டறியப்பட்டுள்ளது.. சமுதாய பரவலுக்கான மற்றொரு அறிகுறியும் இதுதான் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

     கேள்விக்குறி

    கேள்விக்குறி

    "எங்களுக்கு நல்லா தெரியுது, சமூக பரவல் ஆரம்பமாகிவிட்டது.. அதுதான் கொஞ்ச காலமாக நடந்தும் வருகிறது.. அதை எப்படி கட்டுப்படுத்துவது, அழிக்க முயற்சிப்பது என்பதுதான் கேள்விக்குறியாக உள்ளது, எனவே இதை மெதுவாகத்தான் அணுக வேண்டும்.. வைரஸ் உள்ள அனைவரையும் கண்டுபிடிப்பது கடினம்தான்" என்று ஐசிஎம்ஆர் துணை குழுவின் உறுப்பினரும், கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் முன்னாள் அதிபருமான ஜெயபிரகாஷ் முலைல் கருத்து தெரிவித்துள்ளார்.

    ஆனால் ஒன்று மட்டும் உறுதி.. மத்திய அரசும், அனைத்து மாநில அரசுகளும் ஏதாவது அதிரடியான விரைவான நடவடிக்கையாக எடுத்தாக வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டு வருகின்றன என்பது மட்டும் உண்மை.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+