டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்வு

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பாதிப்பு குறைவான இடங்களில் இன்று நள்ளிரவு முதல் லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

Recommended Video

    தமிழகத்தில் வேகமாக குறையும் கொரோனா... என்ன காரணம்?

    கொரோனாவை கட்டுப்படுத்த 40 நாட்கள் லாக்டவுன் அமலில் உள்ளது. வரும் மே 3-ந் தேதி வரை இந்த லாக்டவும் அமலில் இருக்கும்.

    Coronavirus Lockdown Extension: Centre to to ease lockdown from today mid-night

    இதனிடையே லாக்டவுன் நீட்டிப்பு குறித்து நாட்டு மக்களிடையே உரையாற்றிய பிரதமர் மோடி. ஏப்ரல் 20-ந் தேதி முதல் பாதிப்பு குறைவான இடங்களில் லாக்டவுன் தளர்த்தப்படும் என அறிவித்தார். இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சகமும் லாக்டவுன் தளர்வு தொடர்பான அறிவிக்கையை வெளியிட்டிருந்தது.

    கட்டுமான நிறுவனங்கள், 100 நாட்கள் வேலை திட்டம், இணைய சேவைகள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்கள் நாளை முதல் 50% பணியாளர்களுடன் இயங்க உள்ளது. இதற்கான தளர்வுகள் இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

    தளர்வடையும் லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. கட்டுமான நிறுவனங்களுக்கு ஒடிஷா அரசு அட்வைஸ் தளர்வடையும் லாக்டவுன் கட்டுப்பாடுகள்.. கட்டுமான நிறுவனங்களுக்கு ஒடிஷா அரசு அட்வைஸ்

    அதேநேரத்தில் பல மாநிலங்கள் லாக்டவுன் தளர்வு குறித்து எந்த முடிவையும் அறிவிக்காமலும் இருக்கின்றன. டெல்லியைப் பொறுத்தவரையில் மே 3-ந் தேதி வரை லாக்டவுன் நீடிக்கும்; தளர்வுகள் இருக்காது என அறிவித்துள்ளது.

    தமிழகத்தில் லாக்டவுன் தளர்வுக்கான குழு அமைக்கப்பட்டிருக்கிறது. அக்குழுவின் பரிந்துரை அடிப்படையில் லாக்டவுன் தளர்வுகள் அமல்படுத்தப்படும். அதுவரை லாக்டவுன் கட்டுப்பாடுகள் நடைமுறையில் நீடிக்கும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

    English summary
    Centre will ease lockdown from today mid-night for some areas.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X