லாக்டவுனால் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
லாக்டவுனால் இந்தியாவில் விமான போக்குவரத்து துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம்
டெல்லி: லாக்டவுனால் இந்தியாவில் மட்டும் விமான போக்குவரத்துத் துறையில் 29.32 லட்சம் பேர் வேலையை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு- International Air Transport Association (IATA) எச்சரித்துள்ளது.
Recommended Video
கொரோனாவைத் தடுக்க நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்டிருக்கும் 40 நாள் லாக்டவுன் தற்போது 5 வாரம். இந்த லாக்டவுன் காலம் நாட்டின் ஒட்டுமொத்த தொழில்துறையை முடக்கி வைத்துள்ளது.

இந்த லாக்டவுன் விளைவுகள் என்பது 40 நாட்களுடன் முடிவடையப் போவதில்லை என்பது இப்போதே புரிந்துவிட்டது. ஒவ்வொரு துறையும் ஆட்குறைப்பு, ஊதிய குறைப்பு என பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.
இதனடிப்படையில் இந்தியாவில் விமான போக்குவரத்துத் துறையில் 29.32 லட்சம் பேர் வேலை இழக்கும் சூழ்நிலை உள்ளது என்று சர்வதேச விமானப் போக்குவரத்து கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்திருக்கிறது. மேலும் இந்திய விமானப் போக்குவரத்துத் துறையின் வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் 11,221 மில்லியன் டாலர் குறைவாக இருக்கும் எனவும் சுட்டிக்காட்டியுள்ளது.
லாக்டவுனுக்கு பிந்தைய காலத்திலும் பயணிகளிடையே விமானப் போக்குவரத்தின் தேவை என்பது 47 சதவீதம் சரிவை எதிர்கொள்ளுமாம். இந்தியா மட்டுமல்ல இந்தோனேசியா, ஜப்பான், மலேசியா, பிலிப்பைன்ஸ், தென் கொரியா, இலங்கை, தாய்லாந்து என பல நாடுகளும் இந்த பேராபத்தை உணர்ந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இக் கூட்டமைப்பின் ஆசிய பசிபிக் பிராந்திய துணைத் தலைவர் கன்ராட் கிளிபோர்டு வலியுறுத்தியிருக்கிறார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ்












Click it and Unblock the Notifications