டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் 3-வது மாடியில் இருந்து குதித்து கொரோனா நோயாளி தற்கொலை முயற்சி
டெல்லி: கொரோனா தொற்று நோய் பாதிக்கப்பட்டு டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 37 வயது நோயாளி திடீரென 3- வது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்ய முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
Recommended Video
டெல்லி ஐபி எஸ்டேட் பகுதியைச் சேர்ந்த 37 வயது நபர் கொரோனா அறிகுறியுடன் கடந்த மாதம் 31-ந் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.

இந்நிலையில் திடீரென நேற்று இரவு அவர், சிகிச்சை பெற்று வந்த கட்டிடத்தின் 3-வது மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்ய முயன்றார். இதனை பார்த்த மற்றவர்கள் அவரை உடனடியாக மீட்டனர்.
தற்போது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டு உயிர் பிழைத்திருக்கிறார் அந்த நபர். கொரோனா தாக்கத்தால் பலர் தற்கொலைக்கு முயற்சிக்கின்றனர். இது கொரோனா சிகிச்சை பெறுவோரிடம் ஒரு வித அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனால் கொரோனா தொற்று நோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்கள் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரித்து வருகிறது. ஆகையால் கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் நம்பிக்கை இழக்க அவசியம் எதுவும் இல்லை என்பது மருத்துவர்கள் கருத்து.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications