கொரோனா: 24 மணிநேரத்தில் 35 பேர் பலி- உயிரிழப்பு எண்ணிக்கை 308 ஆக அதிகரிப்பு
டெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று நோய்க்கு கடந்த 24 மணிநேரத்தில் 35 பேர் பலியாகி உள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 308 ஆக அதிகரித்துள்ளது.
Recommended Video
கொரோனாவால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள மாநிலம் மகாராஷ்டிரா. இம்மாநிலத்தில் 1985 பேருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் மகாராஷ்டிராவில் 149 பேர் உயிரிழந்துள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா தொற்றுக்கு 11 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்தம் 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு உள்ளது. ராஜஸ்தானில் 804, மத்திய பிரதேசத்தில் 564, தெலுங்கானாவில் 504, உ.பி.யில் 483, கேரளாவில் 376 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதில் மத்திய பிரதேச மாநிலத்தில் மொத்தம் 36 பேர் பலியாகி உள்ளனர். குஜராத்தில் 25 பேர் கொரோனாவால் மரணித்துள்ளனர். இங்கு மொத்தம் 516 பேருக்கு கொரோனா உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் 1154 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ஆந்திராவில் 427 பேரும் ஜம்மு காஷ்மீரில் 245 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். கர்நாடகாவில் 232 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
INDIA COVID-19 TRACKER
மேலும் INDIA COVID-19 TRACKER புள்ளி விவரங்களின்படி இந்தியாவில் கொரோனாவால் பலியானோர் எண்ணிக்கை 331 என்றும் 9,211 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் புள்ளி விவரத்தில் தமிழகத்தில் 1043 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஆனால் தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் நேற்று அளித்த பேட்டியில் தமிழகத்தில் மொத்தம் 1,075 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியிருந்தார். இதனையே INDIA COVID-19 TRACKER புள்ளி விவரமும் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
-
இனி ஒன்று இல்லை.. இரண்டு OTP-க்கள் வேண்டும்.. ஒரு பைசா கூட ஏமாற்ற முடியாது.. அதிரடி அறிவிப்பு -
முதியவர்கள் அதிகம் வாழும் மாநிலமாக மாறுகிறதா தமிழ்நாடு..? இதென்னப்பா புது பிரச்சனை? -
இந்தியாவில் எகிறும் சிசேரியன் பிரசவங்கள்.. தனியார் ஆஸ்பத்திரிகளை அம்பலப்படுத்திய ரிப்போர்ட்! -
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள்.. கிராமத்து பகுதியில் தொடரும் அவலம்.. பகீர் ரிப்போர்ட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications