பாலிவுட் பாடகி கனிக கபூருக்கு கொரோனா- பீதியில் பார்ட்டியில் பங்கேற்ற வசுந்தரராஜே சிந்தியா குடும்பம்!
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள பாலிவுட் பாடகி கனிகா கபூரின் பார்ட்டியில் பங்கேற்றதால் ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தராஜே சிந்தியா குடும்பமே தங்களை சுய தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.
நாட்டின் ஒவ்வொரு மாநிலத்திலும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

பாலிவுட்டில் பிரபல பாடகியான கனிகா கபூருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு லக்னோ மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹோலி பண்டிகையை முன்னிட்டு துபாய், லண்டன் ஆகிய நாடுகளுக்கு கனிகா கபூர் சென்று வந்ததால் அவருக்கு கொரோனா தொற்று நோய் பரவி இருக்கலாம் என தெரியவந்துள்ளது. இதனிடையே கனிகா கபூர் பங்கேற்ற லக்னோ பார்ட்டியில் ராஜஸ்தான் மாநில முன்னாள் முதல்வர் வசுந்தர ராஜே சிந்தியா, அவரது மகனும் பாஜக எம்.பி.யுமான துஷ்யந்த்சிங் உள்ளிட்டோரும் பங்கேற்றனர்.
வசுந்தரராஜே சிந்தியா விளக்கம்
இதனையடுத்து வசுந்தராஜே சிந்தியா குடும்பத்தினருக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொண்டதாக தகவல்கள் வெளியாகின .இந்த நிலையில் தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள வசுந்தரராஜே சிந்தியா, லக்னோவில் மகன் துஷ்யந்த் மற்றும் உறவினர்களுடன் இரவு விருந்துக்காக சென்றிருந்தோம். அதில் விருந்தினராக கனிகா கபூர் பங்கேற்றார். அவருக்கு கொரோனா இருப்பதாக தெரியவந்துள்ளது.
While in Lucknow, I attended a dinner with my son Dushyant & his in-laws. Kanika, who has unfortunately tested positive for #Covid19 was also a guest.
— Vasundhara Raje (@VasundharaBJP) March 20, 2020
As a matter of abundant caution, my son & I have immediately self-quarantined and we’re taking all necessary precautions.
இதனையடுத்து நானுன் என் மகன் துஷ்யந்தும் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறோமென கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில்?
இதனிடையே லக்னோ பார்ட்டிக்குப் பின்னர் துஷ்யந்த் எம்.பி. நாடாளுமன்றத்தில் சென்று நிகழ்ச்சிகளில் பங்கேற்றதாக இந்தியா டுடே ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. இத்தகவல் உறுதிப்படுத்தப்படவில்லை.
-
“வெறும் காகிதத்தில் மட்டுமே 717 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதா?”.. முதல்வர் விஜய்க்கு பாஜக கேள்வி! -
கூண்டோடு கலைஞ்சிருச்சா?" பாஜகவின் சைலண்ட் கேம்... தனித்து விடப்பட்டாரா அமமுக டிடிவி தினகரன்? -
பாஜகவை விட்டு விலகிய முன்னாள் MP நரசிம்மன்.. அண்ணாமலை பேச்சை கேட்டிருந்தா இந்நேரம் பாஜக ஆட்சியாம்! -
அண்ணாமலைக்கும் - விஜய்க்கும் இடையேதான் போட்டி.. உடைத்து பேசிய அமர் பிரசாத் ரெட்டி! -
யூடியூபர் முக்தார் கைது.. அலிசா அப்துல்லா புகாரில் தலைமறைவாக இருந்தவர் மைசூரில் பிடிபட்டார் -
ரஜினிகாந்த் மருமகன் விசாகன்.. அண்ணாமலையின் ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் இணையப் போகிறார்? ட்விஸ்ட் -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
திராவிட அரசியலை உடைத்த தவெக.. விஜய் வெற்றியால் டென்ஷனான பாஜக? சாணக்கிய அமித்ஷா அடுத்த பிளான் இதுதானா -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை












Click it and Unblock the Notifications