இதெல்லாம் நீதித்துறை வேலை இல்ல.. அனைத்திலும் தலையிட்டால் அரசு எதற்கு? மத்திய சட்ட அமைச்சர் கேள்வி
டெல்லி: எல்லாவற்றிலும் நீதித்துறையே தலையிட்டால் அரசாங்கம் எதற்கு உள்ளது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியது தற்போது விவாதப் பொருளாகி இருக்கிறது.
தனியார் ஆங்கில தொலைக்காட்சியான இந்தியா டுடே நடத்திய கான்கிளேவ் நிகழ்ச்சியில் மாநில முதலமைச்சர்கள், மத்திய அமைச்சர்கள், துறை சார் வல்லுநர்கள் கலந்துகொண்டு பேசுவது வழக்கம்.
அந்த வகையில் அந்த நிகழ்ச்சியில் மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கலந்துகொண்டு பல்வேறு கருத்துக்களை முன்வைத்து பேசி இருக்கிறார்.

நீதிமன்றத்தின் வேலை இல்லை
அப்போது பேசிய அவர், "கொரோனா காலக்கட்டத்தில் டெல்லி உயர்நீதிமன்றம் கொரோனா தொடர்பான முடிவுகளை எடுக்க தனி குழுவை அமைக்க வேண்டும் என்ற உத்தரவை பிறப்பித்தது. உடனே நாங்கள் மத்திய அரசின் தலைமை வழக்கறிஞரிடம் இது நீதிமன்றத்தில் வேலை இல்லை என்று சொல்ல சொன்னோம்.

அரசின் வேலை
எங்கள் வேலையை உச்சநீதிமன்றம் செய்யக்கூடாது என்று கூறினோம். இதுபோன்ற சவால்களை சமாளிக்கும் இடத்தில்தான் அரசாங்கம் உள்ளது. நான் எங்காவது நீதித்துறையின் செயல்பாட்டில் தலையிட்டு உள்ளேனா? இல்லை. நீதித்துறையை வலுவான அமைப்பாக உருவாக்கவே நான் அறிவுறுத்தி வருகிறேன்.

அரசாங்கம் எதற்கு?
நீதிபதிகள் அவர்கள் எதிர்பார்க்கும் பணியை செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். ஒருவேளை நீதித்துறையே எங்கு சாலை அமைக்க வேண்டும்? என்பன போன்ற முடிவுகளை எடுத்தால் அரசாங்கம் எதற்கு? சுயநலனுக்காக பொதுநல வழக்குகள் தொடுக்கும்போது அதை தள்ளுபடி செய்ய வேண்டும்.

வழக்குகள்
எல்லா விசயமும் ஏன் நீதிமன்றத்துக்கு செல்கிறது என்பதே எனக்கு தெரியவில்லை. ஒவ்வொரு ஜாமீன் மனுவும் உச்சநீதிமன்றத்துக்கு செல்கிறது. உச்சநீதிமன்றம் ஏன் ஜாமீன் மனுவை விசாரிக்கிறது கீழமை நீதிமன்றங்களே இதுபோன்ற மனுக்களை விசாரிக்க வேண்டும்.

ஜாமீன்
உயர்நீதிமன்றங்களும் குறைந்த அளவிலான ஜாமீன் மனுக்களையே விசாரிக்க வேண்டும். உச்சநீதிமன்றத்தை மறந்துவிடுங்கள். மரண தண்டனை அல்லது அதற்கு தொடர்புடைய வழக்குகளை தவிர்த்து மற்ற வழக்குகள் உச்சநீதிமன்ற விசாரணைக்கு தகுதியற்றவை." என்று தெரிவித்து உள்ளார்.
-
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின்












Click it and Unblock the Notifications