அதிகரிக்கும் கொரோனா..18,840 பேருக்கு தொற்று உறுதி - நாடு முழுவதும் 1,25,028 பேர் சிகிச்சை
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 16,104 பேர் குணமடைந்துள்ளனர்.
டெல்லி: நாடு முழுவதும் கொரோனா தொற்று வீரியமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதித்த 16,104 பேர் குணமடைந்துள்ளனர்.
இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. கடந்த சில நாட்களாக தினசரி தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வருவதை தொடர்ந்து பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், கட்டுப்பாடுகள் விதிக்கும்படி மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.

தமிழகம், மகாராஷ்டிரா, கர்நாடகா, டெல்லி, கேரளா உட்பட நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில், கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளது. இதனால் நாட்டின் கொரோனா தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதை அடுத்து, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்படி, மாநில அரசுகளுக்கு, மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது.
இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 18,840 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் 18,930 பேருக்கும், நேற்று 16,159 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது . இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப் பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4,36,04,394ஆக அதிகரித்துள்ளது.
அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 16,104 பேர் குணமடைந்த நிலையில் , கொரோனாவிலிருந்து மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,29,53,980 ஆக உயர்ந்துள்ளது.தற்போது வரை இந்தியாவில்1,25,028 பேர் கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Recommended Video
அதேசமயம் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்த 43 பேர் தொற்று பாதிப்பால் உயிரிழந்த நிலையில், கொரோனா பலி எண்ணிக்கை 5,25,386 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications