டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

கைகொடுத்த லாக்டவுன்... கொரோனாவிற்கு 3.29 லட்சம் பேர் பாதிப்பு - 3.56 லட்சம் பேர் டிஸ்சார்ஜ்

நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவிற்கு 3,29,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,56,082 பேர் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Google Oneindia Tamil News

டெல்லி: கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல மாநிலங்களில் லாக்டவுன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக தற்போது கொரோனா பரவல் படிப்படியாக கட்டுக்குள் வந்து கொண்டிருக்கிறது. தினசரியும் கொரோனாவால் 4 லட்சத்திற்கும் மேல் பாதிக்கப்பட்டு வந்த நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் 3,29,942 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 3,56,082 பேர் நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர்.

Recommended Video

    சற்றே குறைந்த கொரோனா தொற்று… ஒரே நாளில் 3.53 லட்சம் பேர் குணம்!

    கொரோனா இரண்டாம் அலை நாடு முழுவதும் தீவிரமாக பரவி வருகிறது. கொத்து கொத்தாக பரவி வரும் கொரோனாவால் மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. ஆக்சிஜன் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல ஆலைகளில் ஆக்சிஜன் உற்பத்தி அதிகரிக்க உத்தரவிட்டப்பட்டுள்ளது.

    அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு - சென்னையில் தொடங்கி வைத்தார் சேகர்பாபு அரசு மருத்துவமனைகளில் 24 மணிநேர இலவச உணவு - சென்னையில் தொடங்கி வைத்தார் சேகர்பாபு

    கொரோனா தினசரி பாதிப்பு 4 லட்சத்திற்கும் மேல் பதிவானது. 4ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த நிலையில்
    கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி உள்ளிட்ட பல மாநிலங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் தவிர பிற கடைகள் மூடப்பட்டுள்ளன. பொது போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது.

    2,29,92,517 பேர் கொரோனா பாதிப்பு

    2,29,92,517 பேர் கொரோனா பாதிப்பு


    கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக குறையத் தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கடந்த 24 மணிநேரத்தில் 3,29,942 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 2,29,92,517 பேராக அதிகரித்துள்ளது.

    1,90,27,304 குணமடைந்தனர்

    1,90,27,304 குணமடைந்தனர்

    கொரோனாவில் இருந்து 3,56,082 பேர் குணமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவில் இருந்து 1,90,27,304 பேர் குணமடைந்துள்ளனர். 37,15,221 பேர் நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    2,49,992 உயிரிழப்பு

    2,49,992 உயிரிழப்பு

    கடந்த 24 மணி நேரத்தில் 3,876 பேர் கொரோனாவிற்கு பலியாகியுள்ளனர். இதன் மூலம் நாடு முழுவதும் கொரோனாவிற்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,49,992 பேராக அதிகரித்துள்ளது.

    17,27,10,066 தடுப்பூசி

    17,27,10,066 தடுப்பூசி

    கொரோனாவைக் கட்டுப்படுத்த கடந்த ஜனவரி 16ஆம் தேதி முதல் நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் மே 10ஆம் தேதி வரை 17,27,10,066 டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

    English summary
    India reports 3,29,942 new COVID19 cases, 3,56,082 discharges and 3,876 deaths in the last 24 hours, as per Union Health Ministry. The death toll in India due to the novel coronavirus pandemic has risen to 2,49,992, the Union Health Ministry has said.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X