இந்தியாவில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா.. கர்நாடகாவில் பரவும் AY.4.2 வகை.. கேரளாவில் 622 பேர் பலி
டெல்லி: இந்தியாவில் 34,231,207 பேருக்கு இதுவரை கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 16,342 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
இந்தியாவிலும் தினசரி கேஸ்கள் திடீரென 16 ஆயிரத்திற்கும் மேல் உயர்ந்துள்ளது. கடந்த 1 வாரமாக 13 ஆயிரத்திற்கும் கீழ் கேஸ்கள் பதிவான நிலையில் இப்போது திடீரென பாதிப்பு அதிகரித்துள்ளது. இந்தியாவில் இதுவரை 456,418 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் 734 பேர் பலியாகி உள்ளனர். இந்தியாவில் இதுவரை 33,606,719 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவில் 168,070 பேர் தற்போது ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர்.

கர்நாடகா
கர்நாடகாவில் உருமாறிய கொரோனா வைரஸ் வகையான AY.4.2. வகை கொரோனா பரவி வருகிறது. கர்நாடகாவில் 7 பேருக்கு புதிய AY.4.2. வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அங்கு 3ம் அலை தொடங்குமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. கர்நாடகாவில் கொரோனா காரணமாக 29,86,835 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 282 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் இதுவரை 38,037 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 29,40,339 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 8,430 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடகாவில் 13 பேர் பலியாகி உள்ளனர்.

தமிழ்நாடு
ஆனால் தமிழ்நாட்டில் இதுவரை புதிய வகை உருமாறிய கொரோனா கேஸ்கள் பதிவாகவில்லை. தமிழ்நாட்டில் தினசரி பாதிப்பு 1100க்கும் கீழே சென்றுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா காரணமாக 26,98,493 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். தமிழ்நாட்டில் புதிதாக 1075 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 36,060பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். மொத்தமாக 26,50,145 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு 12,288 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். கடந்த 24 மணி நேர்தத்தில் தமிழ்நாட்டில் 12 பேர் பலியாகி உள்ளனர்.

மகாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக 66,06,536 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு புதிதாக 1485 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 19,480 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 1,40,098 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 64,43,342 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர். அங்கு புதிதாக 38 பேர் பலியாகி உள்ளனர்.

கேரளா
கேரளாவில் நேற்று பலியானவர்கள் எண்ணிக்கை உச்சம் தொட்டுள்ளது. அங்கு பழைய கணக்கில் சேர்க்கப்படாத மரணங்கள் கணக்கில் சேர்க்கப்பட்டு வருகிறது. இதனால் நேற்று கேரளாவில் மட்டும் புதிதாக 622 பேர் பலியாகி உள்ளனர். அங்கு கடந்த 24 மணி நேரத்தில் 9445 பேருக்கு கொரோனா ஏற்பட்டது. கேரளாவில் கொரோனா காரணமாக 48,31,468 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அங்கு 76,629 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். அங்கு இதுவரை 29,977 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர். அங்கு மொத்தமாக 48,31,468 பேர் இதுவரை குணமடைந்து உள்ளனர்.
-
"நாளைக்கு வரோம்.. களத்தை அதிர வைக்கிறோம்!" டெல்லியை மிரள வைக்க கிளம்பிய கரப்பான் பூச்சி கட்சி! -
"பொருளாதார சுனாமி.." ராகுல் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. சட்டென பாயிண்ட்டை பிடித்த பாஜக! மோதல் -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
இந்தியா கையில் 5ம் தலைமுறை Su-57 போர் விமானம்.. ரஷ்ய அதிபர் புதினின் பெரிய ஆஃபர்.. மோடி ஏற்பாரா? -
இந்தியா கூட்டணியில் இனி திமுக இல்லை? காங்கிரஸின் செயலால் பாஜகவிற்கு மிகப்பெரிய ஜாக்பாட் -
2029க்கு டார்கெட் செய்யும் விஜய்.. எப்படியாவது உள்ளே நுழைய வேண்டும்.. திமுக கொடுத்த கேப்.. ராகுல் முடிவு என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா












Click it and Unblock the Notifications