நாடு முழுவதும் லாக்டவுன் நீட்டிப்பு.. இன்று முதல் எதற்கெல்லாம் தடை.. எதற்கெல்லாம் அனுமதி... விவரம்
டெல்லி: கொரோனா வைரஸ் சங்கிலி தொடர்போல் பரவுவதை தடுக்க நாட்டில் மூன்றாவது கட்டமாக லாக்டவுன் (முடக்குதல்) இன்று முதல் இன்னும் இரண்டு வாரங்களுக்கு நீட்டித்துள்ளது மத்திய அரசு. எதற்கு எல்லாம் அனுமதி, எதற்கு எல்லாம் தடை என்பதை இப்போது பார்ப்போம்.
Recommended Video
மத்திய சுகாதார அமைச்சகம் மே 3ம் தேதியான இன்று மாலை வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, நாட்டில் மொத்த கொரோனா வைரஸ் கேஸ்களின் எண்ணிக்கை 40,263 ஆக உயர்ந்தது, 1,306 பேர் உயிரிழந்தனர். கடந்த 24 மணி நேரத்தில் 2487 கேஸ்கள் பதிவாகி உள்ளது. 83 பேர் இறந்துள்ளனர்.
இந்நிலையில் அண்மையில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில் " கொரோனா தொற்று பரவல் குறித்த ஒரு விரிவான மறுஆய்வுக்குப் பிறகு, ஊரடங்கை நீட்டிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது என்று தெரிவித்தது. இதன்படி நாடு தழுவிய ஊரடங்கு இன்று (மே 4) முதல் அமலுக்கு வருகிறது. எதற்கெல்லாம் அனுமதி, எதற்கு எல்லாம் தடை என்பதை இப்போது பார்க்கலாம்.

அனுமதி இல்லை
சாலை வழியாக விமானம், ரயில், மெட்ரோ மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பயணம்
பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பிற கல்வி, பயிற்சி, பயிற்சி நிறுவனங்களை நடத்துதல்
ஹோட்டல் மற்றும் உணவகங்கள் உள்ளிட்ட விருந்தோம்பல் சேவைகள்
சினிமா அரங்குகள், மால்கள், ஜிம்கள், விளையாட்டு வளாகங்கள் போன்ற பெரிய பொதுக்கூட்டங்களின் இடங்கள்
சமூக, அரசியல், கலாச்சார மற்றும் பிற வகையான கூட்டங்கள்
மத இடங்கள், பொது வழிபாட்டுத் தலங்கள்

144 தடை உத்தரவு
அனைத்து மண்டலங்களிலும் அத்தியாவசியமற்ற தேவைகளுக்காக தனிநபர்கள் இரவு 7 மணி முதல் காலை 7 மணி வரை வெளியில் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அதிகாரிகள் 144 தடை உத்தரவு விதித்து உத்தரவுகளை பிறப்பித்து, கடுமையாக நடைமுறைப்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அனைத்து மண்டலங்களிலும், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள், உடல்நலக்குறைவு உள்ளவர்கள், கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் 10 வயதிற்குட்பட்ட குழந்தைகள் வீட்டிலேயே தங்க வேண்டும். அத்தியவாசிய சேவைகள் தவிர வேறு எதற்கும் வெளியில் செல்லக்கூடாது. OPD கள் மற்றும் மருத்துவ கிளினிக்குகள் சிவப்பு, ஆரஞ்சு மற்றும் பசுமை மண்டலங்களில் சமூக தொலைதூர விதிமுறைகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளுடன் செயல்பட அனுமதிக்கப்படும். இருப்பினும், கட்டுப்பாட்டு மண்டலங்களில் இவை அனுமதிக்கப்படாது.

ஆட்டோவுக்கு தடை
கீழ்கண்ட் நடவடிக்கைகள் சிவப்பு மண்டலங்களில் அனுமதிக்கப்படவில்லை
சைக்கிள் ரிக்ஸா மற்றும் ஆட்டோ ரிக்ஷாக்களை இயக்குதல்;
டாக்சிகள் மற்றும் கேப்கள் இயக்குதல்;
பேருந்துகள் இயக்ம் மாவட்டங்களுக்குள் மற்றும் மாவட்டங்கள் இடையே
முடிதிருத்தும் கடைகள், ஸ்பாக்கள் மற்றும் சலூன்கள்

எதற்கெல்லாம் அனுமதி
தனிநபர்கள் மற்றும் வாகனங்கள் செல்வதற்கு அடையாள அட்டை அனுமதியுடன் மட்டுமே அனுமுதி . நான்கு சக்கர வாகனங்களில் அதிகபட்சம் 2 நபர்கள் (ஓட்டுநரைத் தவிர), மற்றும் இரு சக்கர வாகனங்களில் ஒருவர் மட்டுமே செல்லலாம். நகர்ப்புறங்களில் உள்ள தொழில்துறை நிறுவனங்கள், அதாவது, சிறப்பு பொருளாதார மண்டலங்கள் (SEZ கள்), ஏற்றுமதி சார்ந்த யூனிட்டுகள், தொழில்துறை எஸ்டேட்கள் மற்றும் கட்டுப்பாட்டுடன் கூடிய தொழில்துறை டவுன்ஷிப்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மருந்துகள், மருத்துவ சாதனங்கள், அவற்றின் மூலப்பொருள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் உற்பத்தி யூனிட்டுகள் இயங்க அனுமதிக்கப்படும். ஹார்டுவேர் உற்பத்தி, சணல் தொழில், மற்றும், பேக்கேஜிங் பொருட்களின் உற்பத்தி யூனிட்டுகளுக்கு அனுமதி வழங்கப்படும். நகர்ப்புறங்களில் கட்டுமான நடவடிக்கைகள், (தொழிலாளர்கள் அங்கேயே இருக்க வேண்டும், எந்தவொரு தொழிலாளர்களையும் வெளியில் இருந்து அழைத்து வரக் கூடாது) அனுமதிக்கப்பட்டுள்ளது.

33 சதவீதம் பணியாளர்கள்
தனித்தனி கடைகளாக இருந்தால் நகர்ப்புறங்களில் கூட இயங்கலாம். அத்தியாவசியமற்ற பொருட்களை விற்பனை செய்யும் கடைகளுக்கும் இது பொருந்தும். இ-காமர்ஸ் நிறுவனங்கள் பொருட்களை விற்பனை செய்யலாம். ஆனால், சிவப்பு மண்டலங்களில், அத்தியாவசிய பொருட்களை வினியோகம் செய்ய மட்டுமே அனுமதிக்கப்படுகின்றன. தனியார் அலுவலகங்கள் தேவைக்கேற்ப 33% தொழிலாளர்களுடன் செயல்பட முடியும். மற்ற பணியாளர்கள் வீட்டிலிருந்து வேலை பார்க்கலாம்.

எந்த சேவைகள் இயங்கலாம்
அனைத்து அரசு அலுவலகங்களும், துணைச் செயலாளர் மற்றும் அதற்கு மேற்பட்ட மூத்த அதிகாரிகளுடன் செயல்படும், மீதமுள்ள ஊழியர்கள் தேவைக்கேற்ப 33% வரை அலுவலகம் வரலாம். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு சேவைகள், சுகாதாரம் மற்றும் குடும்ப நலன், காவல்துறை, சிறைச்சாலைகள், வீட்டுக் காவலர்கள், சிவில் பாதுகாப்பு, தீயணைப்பு மற்றும் அவசர சேவைகள், பேரிடர் மேலாண்மை மற்றும் தொடர்புடைய சேவைகள், தேசிய தகவல் மையம் (என்ஐசி), சுங்க, இந்திய உணவுக் கழகம் (எஃப்சிஐ), தேசிய கேடட் கார்ப்ஸ் (என்.சி.சி), நேரு யுவக் கேந்திரா (என்.ஒய்.கே) மற்றும் நகராட்சி சேவைகளுக்கான பணியாளர்கள் முழு அளவில் வரலாம். எந்த தடையும் இன்றி செயல்படும்.

விவசாய பணிகள்
சிவப்பு மண்டல மாவட்டங்களில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் பணிகள், உணவு பதப்படுத்தும் யூனிட்டுகள் மற்றும் செங்கல் சூளைகள் உள்ளிட்டை செயல்படலாம். கிராமப்புறங்களில், வேறுபாடு இல்லாமல், வணிக வளாகங்களைத் தவிர அனைத்து வகை கடைகளும் இயங்க அனுமதிக்கப்படுகின்றன. விவசாய விநியோகச் சங்கிலியில் பாதிப்பு ஏற்படக் கூடாது. அனைத்து விவசாய நடவடிக்கைகளும், அதாவது விதைப்பு நடவடிக்கை, அறுவடை, கொள்முதல் மற்றும் சந்தைப்படுத்தல் நடவடிக்கைகள் அனுமதிக்கப்படுகின்றன. உள்நாட்டு மற்றும் கடல் மீன்பிடி உள்ளிட்ட கால்நடை வளர்ப்பு நடவடிக்கைகள் முழுமையாக அனுமதிக்கப்படுகின்றன. அவற்றின் சந்தைப்படுத்தல் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளும் அனுமதிக்கப்படுகின்றன.

தனியார் நிறுவனங்கள்
அனைத்து சுகாதார சேவைகளும் (ஆயுஷ் உட்பட) செயல்பட வேண்டும். மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை விமான ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்வது உட்பட. நிதித் துறையின் பெரும்பகுதி செயல்பட்டு வருகிறது. வங்கிகள், வங்கி சாரா நிதி நிறுவனங்கள் (என்.பி.எஃப்.சி), காப்பீடு மற்றும் மூலதன சந்தை நடவடிக்கைகள் மற்றும் கடன் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவை அடங்கும். அங்கன்வாடிகள் செயல்பாடும் அனுமதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம், நீர், சுகாதாரம், கழிவு மேலாண்மை, தொலைத்தொடர்பு மற்றும் இணையம் ஆகிய பயன்பாடுகள் செயல்படும். மேலும் கூரியர் மற்றும் அஞ்சல் சேவைகள் செயல்பட அனுமதிக்கப்படும்.
பெரும்பாலான வணிக மற்றும் தனியார் நிறுவனங்கள் சிவப்பு மண்டல பகுதிகளில் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளன. அச்சு மற்றும் மின்னணு ஊடகங்கள், தகவல் தொழில்நுட்பம் (ஐடி) மற்றும் தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைகள், டேட்டா மற்றும் கால் சென்டர்கள், குளிர் பதனம் மற்றும் கிடங்கு சேவைகள், தனியார் பாதுகாப்பு மற்றும் வசதி மேலாண்மை சேவைகள் ஆகியவை செயல்படலாம்.

மதுவிற்கு அனுமதி
நாடு முழுக்க பச்சை மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால் சிவப்பு மற்றும் ஆரஞ்ச் மண்டலத்தில் மது விற்பனைக்கு அனுமதி கிடையாது. பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சரக்கு வாகனம் அனுமதிக்கப்படும். அனுமதி சீட்டு தேவையில்லை. வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

எதற்கு அனுமதி
ஆரஞ்சு மண்டலங்களில் மதுவிற்பனை கடைகள், பான் மசாலா கடைகள் இயங்க அனுமதி இல்லை.. வாகனங்கள், டாக்சிகள், ஆட்டோ இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஐடி நிறுவனங்கள், தொழிற்சாலைகள் உள்ளிட்ட தனியார் நிறுவனங்கள் இயங்கும். வாகனங்களில் செல்ல பாஸ் இருந்தால் வெளியே செல்ல அனுமதி. கார்களை, பைக்குகளை அனுமதி. கார்களில் 4 பேர் செல்லலாம். பைக்கில் ஒருவர் செல்லலாம். இந்தியாவில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம் என்று மத்திய அரசு சார்பாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமேசான், பிளிப்கார்ட் ஆகிய நிறுவனங்கள் ஆன்லைன் மூலம் அனைத்து பொருட்களையும் விற்பனை செய்யலாம். நாட்டில் பச்சை மற்றும் ஆரஞ்ச் மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்கள் அல்லாத மற்ற பொருட்களையும் ஆர்டர் செய்யலாம். அதாவது புத்தகங்கள், உடைகள், போன்கள் போன்ற பொருட்களையும் ஆர்டர் செய்ய முடியும். ஆனால் சிவப்பு மண்டலங்களில் அத்தியாவசிய பொருட்களை மட்டுமே ஆர்டர் செய்ய அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications