டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

உலகத்தில் குறைந்து வரும் கொரோனா பரவல் 16.26 கோடி பேர் மீண்டனர் - 1.16 கோடி பேர் சிகிச்சை

உலகம் முழுவதும் கொரோனா பரவல் குறையத் தொடங்கியுள்ளது. ஒரே நாளில் 3,86,461 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16,26,77,72 பேர் மீண்டுள்ளனர்

Google Oneindia Tamil News

டெல்லி: உலகம் முழுவதும் கொரோனாவால் ஒரே நாளில் 379,505 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 17,81,79,303 பேராக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 3,86,461 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனாவில் இருந்து 16,26,77,72 பேர் மீண்டுள்ளனர்.

கடந்த 2019ஆம் ஆண்டு முதல் கொரோனா வைரஸ் உலக மக்களை தன் கைப்பிடிக்குள் வைத்துக்கொண்டு ஆட்டிப்படைத்து வருகிறது. முதல் அலையில் அமெரிக்கா, பிரேசில் அதிகம் பாதிக்கப்பட்டது. பல வகையான தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டு செலுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்டு வந்தாலும் வைரஸ் உருமாற்றம் அடைந்து இரண்டாம் அலையாக பரவத் தொடங்கியது இதில் இந்தியாவில் கொத்து கொத்தாக பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

Covid 19 Update: Corona 16.26 crore recovered in world

தற்போது கொரோனா தொற்று பாதிக்கப்பட்டு உலகம் முழுவதும் 1,16,44,277 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனாவால் உலகம் முழுவதும் 8,399 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 38,57,303 பேராக உயர்ந்துள்ளது.

அமெரிக்காவில் கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. அங்கு ஒரே நாளில் 10,091 பேர் மட்டுமே பாதிக்கப்பட்டுள்ளனர். அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 3,43,76,453 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவிற்கு அமெரிக்கா முழுவதும் 6,16,422 பேர் மரணமடைந்துள்ளனர். அமெரிக்கா முழுவதும் கொரோனாவில் இருந்து 2,86,41,027 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். அங்கு மருத்துவமனைகளில் 51,19,004 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்

2 மாதங்களுக்கு பின் 10,000 கீழ் கொரோனா பாதிப்பு.. இந்த 8 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்.. விரிவான தகவல்2 மாதங்களுக்கு பின் 10,000 கீழ் கொரோனா பாதிப்பு.. இந்த 8 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்.. விரிவான தகவல்

இந்தியாவில் ஒரே நாளில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 62,409 பேராக குறைந்துள்ளது. ஒரு நாள் பாதிக்கப் பட்டோர் எண்ணிக்கை 11வது நாளாக 1 லட்சத்திற்கும் கீழே குறைந்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,97,61,964 பேராக உயர்ந்துள்ளது.

கொரோனாவில் இருந்து நாடு முழுவதும் 2,85,73,021 பேர் குணமடைந்துள்ளனர். இந்தியா முழுவதும் மருத்துவமனைகளில் 8,05,422 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். நாடு முழுவதும் கொரோனாவால் 1,310 பேர் மரணமடைந்துள்ளனர். இதன் மூலம் கொரோனாவால் மரணமடைந்தவர்கள் எண்ணிக்கை 3,83,521 பேராக உயர்ந்துள்ளது.

பிரேசில் நாட்டில் கொரோனாவால் 24 மணிநேரத்தில் 74,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,77,04,041 பேராக உயர்ந்துள்ளது. கொரோனாவில் இருந்து 1,60,77,483 பேர் குணமடைந்துள்ளனர். கொரோனா பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 2,335 பேர் மரணமடைந்துள்ளனர்.

Recommended Video

    Wuhan Lab-ல் இருந்து Corona உருவாக்கப்பட்டதா? முதல் முறையாக கருத்து சொன்ன Shi Zhengli: என்ன நடந்தது?

    இங்கிலாந்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. அங்கு ஒரே நாளில் 11,007 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 46,00,623 பேராக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் 127,945 பேர் மரணமடைந்துள்ளனர்.

    English summary
    Worldwide, 3,79,505 people were affected by corona in a single day. The total number of people affected by corona has risen to 17,81,79,303. In a single day, 3,86,461 people recovered and returned home. 16,26,77,72 people have recovered from Corona worldwide.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X