ஏப்ரல் 1 முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி - பிரகாஷ் ஜவடேகர்
ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
டெல்லி: ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் 12 கோடிக்கும் மேற்பட்டோரை பாதித்துள்ளது. இந்தியாவில் ஒன்றரை கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒன்றரை லட்சம் பேர் வரை உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் தளர்வுகள் அல்லாத லாக்டவுன் அமல்படுத்தப்பட்டது. தற்போது தளர்வுகள் அற்ற லாக்டவுன் அமலில் உள்ளது. இந்தியாவில் கடந்த ஜனவரி மாதத்தில் இருந்து கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் ஆகிய இரண்டு கொரோனா தடுப்பூசிகள் செலுத்துப்பட்டு வருகிறது. முதலில் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.
60 வயதிற்கு மேற்பட்டோருக்கும், 45 வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளோருக்கும் தற்போது கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. தற்போது வரை 4 கோடி பேர் வரைக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
ஏப்ரல் 1ஆம் தேதியில் இருந்து 45 வயதிற்கு மேற்பட்டோர் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா தடுப்பூசி தட்டுபாடுகள் இன்றி அனைவருக்கும் கிடைக்கும் வகையில் போதிய அளவில் இருப்பில் உள்ளது என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார்.
45 வயதிற்கு மேற்பட்ட தகுதியான அனைவரும் உடனடியாக பதிவு செய்து, தடுப்பூசியை போட்டுக்கொள்ள வேண்டும் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications