டெல்லி, மகாராஷ்டிராவில் ஒரே நாளில் 91,500 பேருக்கு கொரோனா.. கும்ப மேளாவுக்கு செல்லாதீர்- மத்திய அரசு
டெல்லி: கடந்த 24 மணிநேரத்தில் டெல்லி, மகாராஷ்டிராவில் கொரோனாவால் பாதித்தோரின் எண்ணிக்கை 91,500 ஆக உயர்ந்துள்ளது. இறப்பு எண்ணிக்கையும் வேகமாக உயர்வதை மத்திய அரசு ஒப்புக் கொண்டது.
இந்தியாவல் கொரோனாவின் இரண்டாவது அலை வீசி வருகிறது. இதில் சிக்கி ஏராளமானோர் திணறி வருகிறார்கள். இந்தியாவில் முதல் அலையை போல் இரண்டாவது அலையில் மகாராஷ்டிரா மாநிலம் மிகப் பெரிய பாதிப்பை சந்தித்து வருகிறது.

சனிக்கிழமை நிலவரப்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 16 லட்சத்தை தாண்டியது. கொரோனா கேஸ்கள் 38ஆவத நாளாக உயர்ந்து வருகிறது. குணமடைவோரின் எண்ணிக்கை 87.23 சதவீதமாக குறைந்துள்ளது.
மகாராஷ்டிராவில் புதிதாக 67,123 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 419 பேர் பலியாகியும் 56,783 பேர் கொரோனாவிலிருந்து குணமாகி நேற்று வீடு திரும்பினர். அது போல் டெல்லியில் ஒரே நாளில் 24,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள், 167 பேர் பலியாகிவிட்டனர்.
ஐசியூவில் படுக்கைகள், ஆக்ஸிஜன் சப்ளை, உயிர் காக்கும் மருந்துகள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார். மத்திய அரசின் கீழ் டெல்லியில் இயங்கும் மருத்துவமனைகளில் கொரோனா நோயாளிகளுக்கு 50 சதவீத படுக்கைகளை ஒதுக்க கெஜ்ரிவால் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் நாட்டில் கொரோனாவால் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது கவனிக்கத்தக்க வேண்டிய விஷயமாகும் என தெரிவித்துள்ளது. கொரோனா பரவல் அதிகமாக இருப்பதால் ஹரீத்வார் கும்ப மேளாவுக்கு செல்லும் முடிவை ஜுன அகாதா என்ற அமைப்பு கைவிட்டது. அது போல் தற்போதைக்கு கும்ப மேளாவில் திரளாக கலந்து கொள்ள வேண்டாம் என சாதுக்களை பிரதமர் மோடி கேட்டுக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
டெல்லி, மகாராஷ்டிராவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க ஹரீத்வார் கும்ப மேளாவும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கும்பமேளாவுக்கு சென்றுவிட்டு டெல்லி திரும்பியோர் தங்கள் 14 நாட்கள் வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு டெல்லி அரசு அறிவுறுத்தியிருந்தது.
பிரசதமர் நரேந்திர மோடியுடன் நேற்று இரவு நடந்த ஆலோசனை கூட்டத்தில் கொரோனா சோதனை, கான்டாக்ட் டிராக்கிங், சிகிச்சை ஆகியவற்றில் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு பிரதமர் அறிவுறுத்தியுள்ளார்.
-
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது












Click it and Unblock the Notifications