கோவிஷீல்டு 2 டோஸ் கால இடைவெளி.. மீண்டும் மாற்றியமைக்க திட்டமிடும் மத்திய அரசு.. இது தான் காரணமாம்
டெல்லி: கொரோனா தடுப்பூசியின் தட்டுப்பாடு குறைந்துள்ள நிலையில், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கான கோவிஷீல்டு டோஸ் டோஸ் இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் தொடங்கி வேக்சின் பணிகள் நடைபெற்று வருகிறது. இடையில் கொரோனா 2ஆம் அலை உச்சம் பெற்ற சமயத்தில் கடுமையான வேக்சின் பற்றாக்குறை நிலவியது.
இதனால் வெளிநாடுகளுக்கு வேக்சின் ஏற்றுமதி செய்யப்படுவது தடை செய்யப்பட்டது. மேலும், கோவிஷீல்டு இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியும் நீட்டிக்கப்பட்டது.

கோவிஷீல்டு டோஸ் இடைவெளி
முதலில் 4 முதல் 6 வாரங்களாக இருந்த கோவிஷீல்டு வேக்சின் கால இடைவெளி பின்னர் 8 முதல் 12 வாரங்களாகவும், அதன் பிறகு 12 முதல் 16 வாரங்களாகவும் நீட்டிக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த அறிவிப்பை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்தன. வேக்சின் பற்றாக்குறையை மறைக்கவே டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி அதிகரிக்கப்பட்டுள்ளதாகக் குற்றஞ்சாட்டினர். மேலும் டோஸ்கள் கால இடைவெளியை அதிகரிப்பதால் வேக்சின் பலனும்கூட குறைய வாய்ப்புள்ளதாக அச்சம் தெரிவித்தனர்.

மத்திய அரசு
ஆனால், அதிக கால இடைவெளியில் வேக்சின் அளிப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதாக வல்லுநர் குழு அளித்த பரிந்துரையின் அடிப்படையிலேயே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய அரசு விளக்கமளித்தது. இந்தச் சூழலில் வேக்சின் பற்றாக்குறை இப்போது குறைந்துள்ள நிலையில், 45 வயதைக் கடந்தவர்களுக்கான வேக்சின் கால இடைவெளியைக் குறைப்பது குறித்து மத்திய அரசு ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Recommended Video

மீண்டும் மாற்றம்
இது குறித்து நிதி ஆயோக் உறுப்பினர் என் கே அரோரா கூறுகையில், "தடுப்பூசியின் செயல்திறன் குறித்து பல்வேறு தரவுகளை நாங்கள் சேகரித்து வருகிறோம். இதன் மூலம் அறிவியல்பூர்வமாக கிடைக்கும் முடிவுகளின் அடிப்படையில் கோவிஷீல்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளியை, குறிப்பாக 45 வயதைக் கடந்தவர்களுக்குக் குறைப்பது குறித்து வரும் காலங்களில் முக்கிய முடிவு எடுக்கப்படும்" என்று அவர் தெரிவித்தார்.

கோவிஷீல்டு
கோவிஷீல்டு தடுப்பூசியை இந்தியா மற்றும் பிரிட்டன் நாடுகள் தான் அதிகபட்சமாகப் பயன்படுத்துகின்றன. அதில் பிரிட்டன் நாட்டில் ஒரு கட்டத்தில் டோஸ் இடைவெளி 12 வாரங்கள் வரை அதிகப்படுத்தப்பட்டன. ஆனால், பின்னர் இரண்டு டோஸ்களுக்கு இடையேயான கால இடைவெளி குறைவாக இருப்பதன் மூலம் தடுப்பாற்றல் அதிகரிப்பதை அந்நாட்டு ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதையடுத்து இப்போது அங்கு இரண்டு டோஸ் கால இடைவெளி அதிகபட்சமாக 8 வாரங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
-
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
வேலையில்லாத இளைஞர்களுக்கு அடிக்குது ஜாக்பாட்.. 'VIP' களுக்கு மாதம் ரூ.4000.. கையில் எடுக்கும் விஜய்! -
உதயநிதி ஸ்டாலின் கையில் காவேரி லிஸ்ட்.. ஜூன் 18ல் புள்ளிவிவர பதிலடியுடன் விஜய் போட்ட மாஸ்டர் பிளான் -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
3 மாசம் தாங்காது.. கடுகடுத்த ஸ்டாலின்! புகார் கூறிய அதிமுக! இன்று தவெக புஸ்ஸி ஆனந்த் முக்கிய முடிவு? -
விஜய்யின் கனவு திட்டம்.. கூவம், அடையாறு ஆறுகளை மாற்றப்போகும் மாஸ்டர்பிளான்.. கைகோர்க்கும் டெல்லி












Click it and Unblock the Notifications