24 மணி நேரத்தில் 85,000 வாக்காளர்கள் அதிகரிப்பு- மகாராஷ்டிரா வாக்குப் பதிவு டேட்டாவால் சர்ச்சை!
டெல்லி: மகாராஷ்டிரா மாநிலத்தில் துலே லோக்சபா தொகுதியில் பதிவான வாக்குகள் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட புள்ளி விவரங்கள் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஎம்) குற்றம் சாட்டியுள்ளது.
Thesouthfirst இணையதளத்தில் எழுதப்பட்டுள்ள செய்திக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளதாவது: மகாராஷ்டிராவில் துலே லோக்சபா தொகுதியில் கடந்த மே 20-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றது. இந்த வாக்குப் பதிவுக்குப் பின்னர் தேர்தல் அதிகாரி அன்று இரவு 9 மணிக்கு வெளியிட்ட அறிக்கையில், மொத்தம் 11,31,580 பேர் வாக்களித்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு நாளுக்குப் பின்னர் இறுதி வாக்குப் பதிவு நிலவரம் என தேர்தல் அதிகாரி வெளியிட்ட அறிக்கையில் 12,17,523 பேர் வாக்களித்ததாக இடம் பெற்றிருந்தது.

அதாவது முந்தைய தேர்தல் அதிகாரியின் அறிக்கையை ஒப்பிடுகையில் 24 மணிநேர இடைவெளியில் வாக்கைப் பதிவு செய்த வாக்காளர்கள் எண்ணிக்கை வித்தியாசம் 85943 ஆக இருக்கிறது. இதுதான் இப்போது சர்ச்சையாக வெடித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநில சிபிஎம் எக்ஸ் பக்கத்தில் துலே லோக்சபா தொகுதி வாக்குப் பதிவு தொடர்பான இரண்டு முரண்பட்ட அறிக்கைகளையும் பதிவேற்றி இருக்கிறது. அத்துடன் 24 மணிநேரத்தில் வாக்காளர்கள் எண்ணிக்கை 85943 ஆக எப்படி அதிகரித்திருக்க முடியும் எனவும் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
Tamil Nadu sees a 69.72% voter turnout in the 2024 Lok Sabha elections, with women voters leading in most areas.
— thehardnewsdaily (@TheHardNewsD) April 21, 2024
Dharmapuri records the highest participation. Amidst revised figures, the BJP eyes significant gains, possibly overtaking DMK.
#TamilNaduElections2024… pic.twitter.com/KP9OHkOGQe
கேரளா எம்.எல்.ஏ.வும் சிபிஎம் கட்சியின் மத்திய குழு உறுப்பினருமான தற்போதைய தேர்தலில் கேரளாவின் வடகரை தொகுதியில் போட்டியிடும் கேகே சைலஜா இது பற்றி கூறுகையில், 85,000 வாக்காளர்கள் அதிகரித்திருப்பது என்பது வழக்கத்துக்கு மாறானதாக இருக்கிறது. இதில் ஏதோ முறைகேடு நடந்திருப்பதாகவே சந்தேகிக்கிறோம் என்கிறார்.
மகாராஷ்டிரா மாநில சிபிஎம் செயலாளர் உதய் நர்கார் கூறுகையில், லோக்சபா தேர்தலின் முதல் 4 கட்ட வாக்குப் பதிவு தொடர்பான தேர்தல் ஆணையத்தின் புள்ளி விவரங்களில் மிகப் பெரிய வேறுபாடு இருக்கிறது. வாக்குப் பதிவு முடிவடைந்த நாளில் வெளியிடப்படும் விவரங்களுக்கும் பின்னர் அப்டேட் செய்ததாக வெளியிடப்படுகிற விவரங்களுக்கும் இடையே மிகப் பெரிய இடைவெளி இருப்பதுதான் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த இரு அறிக்கைகளின் அடிப்படையில் பார்த்தால் வாக்குப் பதிவு நாளை ஒப்பிடுகையில் பிந்தைய அறிக்கைகளின் படி சுமார் 1.07 கோடி வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டுள்ளோம் என்றார்.












Click it and Unblock the Notifications