தீபாவளியன்று இரவு 8-10 மணிக்குள்தான் பட்டாசு வெடிக்கலாம்.. ஆன்லைன் விற்பனைக்கு தடை: உச்சநீதிமன்றம்
Subscribe to Oneindia Tamil
Recommended Video

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க சில நிபந்தனைகள் மட்டுமே - உச்சநீதிமன்றம்- வீடியோ
டெல்லி: தீபாவளியன்று பட்டாசுகள் வெடிக்க உச்சநீதிமன்றம் பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ளது.
நாடு முழுக்க புகை காரணமாக மாசு அதிகரித்துள்ளதாகவும், எனவே பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு பொதுநல வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்கில்தான் இன்று உச்சநீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
நவம்பர் 6, 7ஆம் தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த உத்தரவு முக்கியத்துவம் பெறுகிறது. இரு நீதிபதிகள் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில், பட்டாசு விற்பனைக்கு முழு தடை விதிக்கவில்லை என்றபோதிலும், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
அந்த கட்டுப்பாடுகளை பாருங்கள்:
- குறைந்த அளவிலான புகை, சத்தம் வெளியிடும் பட்டாசுகளை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும். இதுபோன்ற பட்டாசுகளை உற்பத்தி செய்யவும் தடை
- அதிக அளவுக்கு அலுமினியம் உள்ள பட்டாசுகளை தயாரிக்கவோ, விற்பனை செய்யவோ கூடாது
- லைசென்ஸ் உள்ளவர்கள் மட்டுமே பட்டாசு விற்பனையில் ஈடுபட வேண்டும்
- ஆன்லைனில் பட்டாசு விற்பனை செய்ய அனுமதி கிடையாது
- விதிமுறைகளை மீறி பட்டாசு விற்பனை செய்வோருக்கு கடுமையான அபராதம் விதிக்கப்பட வேண்டும்
- தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை
- தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க தடை விதிக்க கூடாது என்பதே மத்திய அரசின் வாதமாக இருந்து வந்தது
- உச்சநீதிமன்றத்தின் உத்தரவு, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் பட்டாசு உற்பத்தியாளர்கள் என இரு தரப்பையும் சமாதானப்படுத்தும் வகையில் உள்ளது












Click it and Unblock the Notifications