பாகிஸ்தானை கதற கதற தோற்கடித்த "சரித்திரம்"! நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் 'வெறி' கொண்டாட்டம்!
டெல்லி: இலங்கை தலைநகர் கொழும்பில் நடைபெற்ற ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்து சரித்திர வெற்றியை பெற்றது. இந்திய அணியின் இந்த அபார வெற்றியை நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர்.
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டியில் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்த போட்டிகளில் ஒன்றான இந்தியா- பாகிஸ்தான் மோதியது. முதல் நாள் ஆட்டத்தில் மழை குறுக்கிட்டதால் கடந்த 2 நாட்களாக பரபரப்பும் பதற்றமும் கிரிக்கெட் ரசிகர்களிடையே தொற்றிக் கொண்டது.

2-வது நாள் ஆட்டத்தில் இந்திய அணியின் விராட் கோலி, கேஎல் ராகுல், பாகிஸ்தான் பந்துவீச்சுகளை பிரித்து மேய்ந்தனர். இந்திய அண் 50 ஓவர்கள் முடிவில் 356 ரன்களைக் குவித்து பாகிஸ்தானை மிரள வைத்தது.
பின்னர் ஆடிய பாகிஸ்தான் அணி வீரர்கள், இந்திய வீரர்களின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் மளமளவென ஓடிப் போயினர். இதனால் இந்திய அணி 228 ரன்கள் வித்தியாசத்தில், பாகிஸ்தானை வீழ்த்தி சம்பவம் செய்துவிட்டது.

இந்திய அணியின் இந்த சரித்திர வெற்றியை, நாடு முழுவதும் ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடித் தீர்த்தனர். மேற்கு வங்க மாநிலம் சிலிகுரியில் பிரம்மாண்ட தேசிய கொடி ஏந்தி வீதிகளில் கொண்டாடிய ரசிகர்கள்

குஜராத் மாநிலம் சூரத் நகரில் விண்ணைப் பிளக்கும் வாணவேடிக்கைகளுடன் இந்திய வெற்றியை கொண்டாடினர் ரசிகர்கள்

மேற்கு வங்கம் சிலிகுரியில் இரவிலும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாக மகிழ்ந்த இந்திய கிரிக்கெட் ரசிகர்கள்

மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் வீதிகளில் உற்சாகம் கரைபுரண்டோட வெற்றி களிப்பில் மிதந்தனர் நமது ரசிகர்கள்.












Click it and Unblock the Notifications