எல்லையை தாண்டினா இந்தியாவுக்கு பதிலடி வெயிட்டிங்காம்ல.. ராஜ்நாத்சிங் பேச்சுக்கு பாகிஸ்தான் மிரட்டல்!
டெல்லி: இந்தியா எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டினால் அதனை எதிர்கொள்ள தயாராக இருப்பதாக பாகிஸ்தான் மிரட்டல் விடுத்துள்ளது.
1999-ம் ஆண்டு கார்கில் போரில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் தியாகத்தை போற்றும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 26 ம் தேதி கார்கில் வெற்றி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளைக் குறிக்கும் வகையில், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் நேற்று லடாக்கின் திராஸில் உள்ள கார்கில் போர் நினைவுச் சின்னத்திற்குச் சென்று மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திராஸில் நடந்த விழாவில் போர் வீரர்கள், மறைந்த வீரர்களின் மனைவிகள், மற்றும் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவர்களுடன் உரையாடிய ராஜ்நாத் சிங், நாட்டுக்காக உயிர்த்தியாகம் செய்த அனைவரையும் நினைவு கூர்ந்து மனமார்ந்த நன்றியைத் தெரிவித்தார். இந்த மாவீரர்களின் தியாகங்கள் ஒருபோதும் மறக்கப்படாது என்று அவர் அவர்களுக்கு உறுதியளித்தார்.
கூட்டத்தில் உரையாற்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத்சிங், ஆயுதப்படைகளின் வீரத்தையும், அர்ப்பணிப்பையும் பாராட்டினார், இது நெருக்கடி காலங்களில் நாடு தலைநிமிர்ந்து நிற்க மீண்டும் உதவியது. வீரர்களின் தியாகத்தின் அடித்தளத்தில்தான் இன்றைய இந்தியா உள்ளது என்றார். 'ஆபரேஷன் விஜய்', மோசமான சூழ்நிலைகளுக்கு மத்தியில் இந்தியாவின் மன உறுதியையும் வெளிப்படுத்தும் ஒரு அத்தியாயம் என்று திரு ராஜ்நாத் சிங் விவரித்தார். இந்த வெற்றி தேசத்தை வெற்றியின் உச்சங்களை அடைய வழிவகுத்த ஒரு ஏவுதளம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் கார்கில் யுத்தம் என்பது இரு ராணுவங்களுக்கு இடையேயானது மட்டுமல்ல.. இரு தேசங்களுக்கு, இரண்டு நாடுகளுக்கு இடையே நிகழ்ந்தது. கார்கில் யுத்தம் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந் தேதி முடிவடைந்தது. அதன்பின்னர், கார்கில் யுத்தத்தில் நாம் வெற்றி பெற்ற நிலையில் நமது ராணுவம் எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டை தாண்டிச் செல்லவில்லை. இந்தியா அமைதியை விரும்புகிறது. இந்தியா அமைதியை விரும்புவதால்தான் கார்கில் யுத்தத்தில் வென்ற போதும் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை நமது ராணுவம் தாண்டி செல்லவில்லை. நாம் ச்ர்வதேச சட்டங்களை மதிப்பவர்கள். எல்லை கட்டுப்பாட்டு கோட்டை அன்று தாண்டி செல்லவில்லை என்பதால் நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்ட முடியாது என்பது அர்த்தம் அல்ல. நாம் எல்லை கட்டுப்பாட்டை தாண்டுவோம். நம்மால் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டவும் முடியும். எதிர்காலத்தில் அப்படியான ஒரு சூழ்நிலை உருவாக்கப்பட்டால் நாம் நிச்சயம் எல்லை கட்டுப்பாட்டு கோட்டை தாண்டுவோம் என்பதை இந்த நாட்டு மக்களுக்கு உறுதியாக தெரிவித்து கொள்கிறேன் எனவும் ராஜ்நாத்சிங் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், காஷ்மீர், கில்கிட் பல்டிஸ்தான் தொடர்பாக இந்திய அரசியல் தலைவர்கள், ராணுவ தளபதிகள் இப்படிப் பேசுவது முதல் முறையல்ல. இந்தியாவின் எந்த ஒரு ஆக்கிரமிப்பு முயற்சியையும் எதிர்கொள்ள பாகிஸ்தான் முழு வீச்சில் தயார் நிலையில் இருக்கிறது என தெரிவித்தனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications