இந்தியாவிலும் கொரோனாவுக்கான Molnupiravir மாத்திரைகளுக்கு ஓரிருநாட்களில் அனுமதி?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கான மெர்க் நிறுவனத்தின் மோல்னுபிரவீர் (Molnupiravir) மாத்திரைகளுக்கு ஓரிரு நாட்களில் அனுமதி வழங்கப்படலாம் என்று மத்திய அறிவியல், தொழில்துறை வளர்ச்சி கவுன்சிலான சி.எஸ்.ஐ.ஆர்-ன் கோவிட் வியூக குழு தலைவர் டாக்டர் ராம் விஸ்வகர்மா தெரிவித்துள்ளார். மேலும் ஃபைசர் நிறுவனத்தின் பாக்ஸ்லோவிட் கொரோனா தடுப்பு மாத்திரைக்கான அனுமதி வழங்குவதற்கு சிறிது காலமாகும் என்றும் டாக்டர் ராம் விஸ்வகர்மா கூறினார்.

CSIRs Covid Strategy Group Chairman Dr Ram Vishwakarma said that Covid Pills Molnupiravirs authorisation is likley within days.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பைக் கட்டுப்படுத்த தடுப்பூசிகள் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் அடுத்தக்கட்டமாக கொரோனா தடுப்பு மாத்திரைகள் தயாரிக்கப்பட்டும் வருகின்றன. இங்கிலாந்தில் Merck Sharp and Dhohme என்ற கொரோனா தடுப்பு மாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஃபைசர் நிறுவனமானது பாக்ஸ்லோவிட் என்ற மாத்திரையை தயாரித்துள்ளது. அண்மையில் பாக்ஸ்லோவிட் மாத்திரைகள் பரிசோதிக்கப்பட்டன. இந்த மாத்திரைகளை எடுத்துக் கொண்டால் கொரோனா பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுதல் அல்லது இறப்பு ஏற்படுதல் என்பது 89% குறையும் என ஃபைசர் நிறுவனம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் சி.எஸ்.ஐ.ஆர்-ன் கோவிட் வியூக குழு தலைவர் டாக்டர் ராம் விஸ்வகர்மா என்.டி.டி.விக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: மிகப் பெரும் சவாலாக இருக்கும் கொரோனா பாதிப்பை முடிவுக்கு அறிவியல் அறிவு மூலம் கொண்டு வர இருக்கிறோம். மோல்னுபிரவீர் மாத்திரைகள் நமக்கு கிடைத்திருக்கின்றன. மருந்து உற்பத்தியாளருடன் தற்போதைய நிலையில் 5 நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. இதனால் விரைவில் மோல்னுபிரவீர் மாத்திரைகளுக்கு எப்போது வேண்டுமானாலும் ஒப்புதல் கிடைக்கக் கூடும்.

மோல்னுபிரவீர் மாத்திரைகளுக்கு பிரிட்டனின் ஒழுங்கு முறை ஆணையத்தின் ஒப்புதலைப் பெற காத்திருக்கிறோம். அமெரிக்காவும் இந்த மாத்திரைகள் தொடர்பாக ஆராய்ந்து வருகிறது. இதனா மோல்னுபிரவீர் மாத்திரைகளுக்கு விரைவாக ஒப்புதல் கிடைக்கலாம். அடுத்த 2 மாதங்களில் Merck Sharp and Dhohme மாத்திரைகளுக்கும் ஒப்புதல் கிடைக்கலாம். Merck நிறுவனமானது கொரோனா தடுப்பு மாத்திரைகளை தயாரிக்க 5 நிறுவனங்களுக்கு உரிமம் கொடுத்திருக்கிறது. இதே பாணியில் ஃபைசர் நிறுவனமும் செயல்படம்க் கூடும்.

இந்த கொரோனா மருந்துகளை விரைவில் மத்திய அரசு வாங்கும் என நினைக்கிறேன். கொரோனா சிகிச்சைக்கு ரூ2,000, ரூ3,000, ரூ4,000 செலவு என்கிற நிலை மாறி ரூ500, ரூ600, ரூ1,000 என்கிற நிலை உருவாக வாய்ப்புகள் உள்ளது. இவ்வாறு டாக்டர் ராம் விஸ்வகர்மா கூறினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+