டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

3 மணி நேரம்தான்! டெல்லியில் இருந்தே சென்னை வங்கியில் 2 கோடி கொள்ளை..நைஜீரிய கும்பல்! எப்படி நடந்தது?

Google Oneindia Tamil News

டெல்லி: சமீப காலமாக சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. சாமானிய மக்களிடம் தான் வங்கிக் கணக்கில் உள்ள பணம் திருடப்படுவது அதிகரிக்கிறது என்றால் வங்கி அதிகாரிகளிடமே நைஜீரிய கும்பல் ஒன்று கைவரிசை காட்டியுள்ளது. நூதன முறையில் நடைபெற்ற இந்த சைபர் கொள்ளை சம்பவம் குறித்த விவரம் வருமாறு:

தமிழ்நாடு கூட்டுறவு வங்கியின் தலைமை அலுவலகம் மண்ணடியில் செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியின் சார்பில் கடந்த மாதம் சென்னை போலீசில் புகார் ஒன்று அளிக்கப்பட்டது.

அதில் வங்கியின் சர்வரை ஹேக் செய்து அதில் இருந்து 2.5 கோடி ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டு சென்றதாக புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் விசரணை நடத்தினர்.

ஒடிபி கூட கேட்கவில்லையாம்..புது யுக்தியில் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யும் கும்பல்..உஷார் ஒடிபி கூட கேட்கவில்லையாம்..புது யுக்தியில் வங்கி கணக்கில் இருந்து பணம் அபேஸ் செய்யும் கும்பல்..உஷார்

 கீ லாக்கர் சென்ற செயலி

கீ லாக்கர் சென்ற செயலி

விசாரணையில், கூட்டுறவு வங்கியின் சர்வரை ஹேக் செய்யும் வகையில் phising மெயில் ஒன்றை அனுப்பி இந்த மோசடி நடைபெற்றது தெரியவந்தது. அதாவது, மெயிலில் வரும் லிங்கை கிளிக் செய்தவுடன் கீ லாக்கர் சென்ற செயலி பயன்படுத்துவர்களுக்கு தெரியாமலேயே கணிணியில் தானாக இன்ஸ்டால் ஆகும். இதன்படி இந்த செயலி வங்கி அதிகாரிகளுக்கு தெரியாமலேயே பதிவிறக்கம் செய்யப்பட்டு இருக்கிறது.

சைபர் தாக்குதல் மூலமாக

சைபர் தாக்குதல் மூலமாக

இந்த கீ லாக்கர் ஒரு கம்ப்யூட்டரில் டவுன்லோடு செய்யப்பட்டால் அதன் மூலம் அந்த கணிணியின் செயல்பாடு மற்றும் அதன் கீ போர்டில் என்ன டைப் செய்கிறோம் என்பதை தெரியாமல் வேறு ஒருவர் கண்காணிக்க முடியும். இதனை பயன்படுத்தி சைபர் தாக்குதல் மூலமாக இந்த நூதன கொள்ளை அரங்கேறியிருப்பதை போலீசார் கண்டறிந்தனர். sweet 32 attack என்று சொல்லப்படும் சைபர் தாக்குதல் மூலமாக கூட்டுறவு வங்கியின் சர்வருக்குள் நுழைந்து மொத்தமாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.

 6 மணியில் இருந்து 9 மணிக்குள்

6 மணியில் இருந்து 9 மணிக்குள்

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இணையதளம் மூலம் லிங்கை அனுப்பி நவம்பர் மாதம் வரை கொள்ளையர்கள் காத்திருந்துள்ளனர். நான்கு மாதங்களாக வங்கியின் செயல்பாடுகள் டேடாக்களை கவனித்து வந்த கொள்ளையர்கள் கீ லாக்கர் செயலி மூலம் அனைத்தையும் திருடியிருக்கின்றனர். இப்படி கிடைத்த டேட்டாக்களை பயன்படுத்தி கடந்த நவம்பர் 18 ஆம் தேதி கூட்டுறவு வங்கி வேலை நேரத்திற்கு முன்பாக அதாவது காலை 6 மணியில் இருந்து 9 மணிக்குள் பணத்தை கொள்ளையடித்து பல்வேறு கணக்குகளுக்கு மாற்றியுள்ளனர்.

 1 கோடி அபேஸ்

1 கோடி அபேஸ்

இதனை அறிந்த வங்கி அதிகாரிகள் உடனடியாக சைபர் கிரைமிற்கு புகார் அளித்து இருக்கின்றனர். இதனால், பணம் பரிமாற்றம் செய்யப்பட்ட வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டு 1.5 கோடி பணம் மீட்கபப்ட்டுள்ளது. மீதமுள்ள ரூ. 1 கோடியை நைஜீரியாவில் உள்ள வங்கிகளுக்கும் மாற்றி கிரிப்டோ கரன்சிகளாகவும் மாற்றப்பட்டு இருப்பதை சைபர் கிரைம் போலீசார் கண்டறிந்தனர். போலி ஆவணங்களை பயன்படுத்தி 32 வங்கி கணக்குகளை உருவாக்கிய நைஜீரிய கும்பல் இந்த மோசடி திட்டத்தை அரங்கேற்றியதையும் சைபர் கிரைம் போலீசார் கண்டுபிடித்தனர்.

ஏற்கனவே குஜராத்தில் கொள்ளை

ஏற்கனவே குஜராத்தில் கொள்ளை

இந்த நைஜீரிய கும்பல் டெல்லி உத்தம் நகரில் இருந்து செயல்பட்டதை கண்டுபிடித்த போலீசார் டெல்லி விரைந்தனர். ஏக்னே காட்வின் மற்றும் அகஸ்டின் என்ற நைஜீரிய நாட்டவர்கள் இருவரை கைது செய்த போலீசார் அவர்களிடம் விசரணை நடத்தினர். அதில், டெல்லியில் 8 ஆயிரம் ரூபாய்க்கு வீடுகளை வாடகைக்கு எடுத்து கணிணிகளை வைத்து மோசடி செயலில் ஈடுபட்டதும் குஜராத்தில் உள்ள கூட்டுறவு வங்கியில் இந்த கும்பல் ஏற்கனவே கொள்ளையடித்ததும் தெரியவந்தது.

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

காவலில் எடுத்து விசாரிக்க முடிவு

துவாரகா நீதிமன்றத்தில் இரு நைஜீரியர்களையும் ஆஜர்படுத்திய போலீசார் அவர்களை சென்னைக்கு அழைத்து வந்தனர். சுற்றுலா, பட்டப் படிப்பு என பல்வேறு காரணங்களை சொல்லி இந்தியாவுக்கு வந்த இந்த நைஜீரியர்கள் சைபர் கொள்ளையில் ஈடுபட்டது தெரிய வந்தது. கைது செய்யப்பட்டுள்ள நைஜீரியர்களை காவலில் எடுத்து விசாரிக்கவும் திட்டமிட்டுள்ளனர். இந்த விசாரணையில் சைபர் கும்பலின் முழு பின்னணியும் தெரிய வரும் எனத்தெரிகிறது.

இந்த 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ பயன்படுத்தலாம்.. விரைவில் அமலுக்கு வரும் சூப்பர் வசதி இந்த 10 நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் யுபிஐ பயன்படுத்தலாம்.. விரைவில் அமலுக்கு வரும் சூப்பர் வசதி

English summary
Cyber crime has been on the rise in recent times. A Nigerian gang has shown its hand to the bank officials as the theft of money from the bank accounts of the common people is on the rise.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X