இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா கேஸ்கள்.. 18 ஆயிரத்தை தாண்டிய தினசரி பாதிப்பு.. கேரளாவில் உச்சம்
டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 18,930 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
Recommended Video
நீண்ட நாட்களுக்கு பின் இந்தியாவில் தினசரி கேஸ்கள் 18 ஆயிரத்தை தாண்டி உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 35 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர்.
இந்தியாவில் மீண்டும் கொரோனா கேஸ்கள் வேகமாக உயர்ந்து வருகின்றன. இந்தியாவில் இதுவரை கொரோனாவிற்கு 5,24,305 பேர் பலியாகி உள்ளனர்

கேரளா
1,19,457 பேர் இந்தியாவில் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளனர். இந்தியாவில் தினசரி கொரோனா பாசிட்டிவ் சதவிகிதம் 4.32 சதவிகிதம் என்ற அளவில் உள்ளது கேரளாவில் 3310 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கேரளாவில் மீண்டும் கேஸ்கள் உயர்ந்து வருகின்றன. கேரளாவில் நேற்று மட்டும் 19 பேர் கொரோனாவிற்கு பலியாகி உள்ளனர். அங்கு இதுவரை 70,108 பேர் பலியாகி உள்ளனர்.

மஹாராஷ்டிரா
மகாராஷ்டிராவில் புதிதாக 800 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அங்கு 3 பேர் கடந்த 24 மணி நேரத்தில் பலியாகி உள்ளனர். 155 நாட்களுக்கு பின் மகாராஷ்டிராவில் கொரோனா காரணமாக மீண்டும் மரணம் பதிவாகி உள்ளது. மும்பையில் மட்டும் இதுவரை 19,622 பேர் பலியாகி உள்ளனர். டெல்லியில் 579 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

டெல்லி
டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். அங்கு இதுவரை 26,277பேர் பலியாகி உள்ளனர், டெல்லியில் பாசிட்டிவ் சதவிகிதம் 3.27 என்ற அளவில் உள்ளது. தமிழ்நாட்டிலும் கொரோனா கேஸ்கள் அதிகரித்து வருகின்றன. இதையடுத்து சென்னையில் கட்டாயம் மாஸ்க் அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு கொண்டு வரப்பட்டுள்ளது.

தமிழ்நாடு
தமிழ்நாட்டில் 2,765 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். தமிழ்நாட்டில் இதுவரை 38,028 பேர் பலியாகி உள்ளனர். நேற்று பலியானவர், 80 வயதுமிக்க முதியவர் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்நாட்டில் தற்போது 18,378 பேர் ஆக்டிவ் நோயாளிகளாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
-
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக












Click it and Unblock the Notifications