கொரோனாவிலிருந்து மீண்டோரின் நுரையீரல் எப்படி இருக்கும்.. ஆய்வில் நல்ல தகவல்கள்!
டெல்லி: கொரோனாவால் பாதிக்கப்பட்ட நுரையீரல்கள் தானாக சரியாகிவிடும் என அண்மையில் நடந்த ஆய்வுகள் கூறுகின்றன.
கொரோனா நோய் முக்கியமாக குறிவைப்பது நுரையீரல்களைத்தான். நோய் தொற்று வீரியம் ஆகும் போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.

கொரோனா தொற்றிலிருந்து மீண்ட பின்னரும் சிலருக்கு நுரையீரலில் பாதிப்பு இருப்பதால் அஞ்சுகிறார்கள். இந்த நிலையில் ஏப்ரல் மற்றும் ஜூன் மாதம் கொரோனாவிலிருந்து மீண்டவர்கள் 82 பேரிடம் ஆய்வு செய்யப்பட்டது.
இதில் அவர்கள் மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட 6, 12, 24 வாரங்களில் நுரையீரல் பாதிப்பு குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இவர்களில் டிஸ்சார்ஜ் ஆன 6 வாரம் மற்றும் 12 வாரம் ஆன நோயாளிகளுக்கு நுரையீரலை ஸ்கேன் எடுத்து பார்க்கப்பட்டது.
அவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு கணிசமாக குறைந்தது தெரியவந்தது. டிஸ்சார்ஜ் ஆகி 6 வாரங்கள் ஆன நோயாளிகளில் 88 சதவீதம் பேருக்கு கடுமையான நுரையீரல் தொற்று இருந்தது ஸ்கேனில் தெரியவந்தது. அது போல் டிஸ்சார்ஜ் ஆகி 12 வாரங்கள் ஆன நோயாளிகளில் 56 சதவீதம் பேருக்கு நுரையீரல் பாதிப்பு இருந்தது.
இதற்கு அர்த்தம் என்னவெனில் கொரோனா நோயாளிகளுக்கு நுரையீரலில் பாதிப்பு இருந்தாலும் டிஸ்சார்ஜ் ஆனவுடன் அவர்களுக்கு தானாகவே சரியாகிவிடும் என ஆய்வுகள் கூறுகின்றன. இது போன்ற ஒரு ஆய்வு பிரான்ஸிலும் நடத்தப்பட்டது.
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நோயாளிகளுக்கும் நுரையீரல் மறுவாழ்வு மையத்தில் இருந்த நோயாளிகளுக்கும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் நுரையீரல் மறுவாழ்வு மையத்தில் இருக்கும் நோயாளிகளின் நுரையீரல் வேகமாக நல்ல நிலைக்கு வருவதும் அவர்களது தசை வலிமை கூடுவதும் நுரையீரலின் திறன் கூடுவதும் கண்கூடாக பார்க்க முடிந்தது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications