முழுசா "புஷ்பாவாக" மாறியிருக்கும் டேவிட் வார்னரை பாருங்க.. கலக்கல் வீடியோ!
டெல்லி: ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் ஆட்டக்காரர் டேவிட் வார்னர் "புஷ்பா" அல்லு அர்ஜுனாக மாறிய வீடியோ வைரல் ஆகி வருகிறது.
சினிமா பாடல்கள், சினிமா நடிகர்களின் பிரபல படத்தின் கெட் அப்களை ரசிகர்கள் பாடி ஆடி வேடமிட்டு வீடியோ எடுத்து வருவர். ஆனால் தற்போது அந்த டிரன்ட் கிரிக்கெட் வீரர்கள் மத்தியிலும் நிலவி வருகிறது.
அதிலும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் கிரிக்கெட் களத்தில் மட்டுமல்லாமல் சமூகவலைதளங்களிலும் ஆக்டிவ்வாக இருந்து வருகிறார். அவர் தனது குடும்பத்துடன் இணைந்து டப்ஸ்மாஷ் வீடியோவை வெளியிட்டு வருகிறார்.
ஸ்டைல் ஸ்டார் அல்லு அர்ஜுன்
அந்த வகையில் தற்போது தெலுங்கு ஸ்டைல் ஸ்டார் அல்லு அர்ஜுனின் புஷ்பா திரைப்பட கெட்டப்பில் ஃபேஸ் ஆப் மூலம் தனது முகத்தை சேர்த்து அந்த வீடியோவை பகிர்ந்துள்ளார். அதற்கு ரசிகர்கள் லைக்ஸ், கமென்டுகளை கொடுத்து வருகிறார்கள். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
32 லட்சம் பேர்
வார்னரின் புஷ்பா லுக் வீடியோவை பார்த்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி வேடிக்கையாக பதில் அளித்துள்ளார். இப்படி அனைவரையும் ஆர்ப்பரிக்கும் இந்த படம் வரும் 17ஆம் தேதி திரைக்கு வருகிறது. இதே போல் நடிகர் தனுஷ் சாய் பல்லவி ஆடிய ரவுடி பேபி பாடலுக்கு தனுஷின் முகத்தை ஃபேஸ் ஆப் மூலம் எடிட் செய்து அதில் தனது முகத்தை வைத்தார் வார்னர். இந்த வீடியோவை 32 லட்சம் பேர் பார்த்தனர்.

ரவுடி பேபி
இந்த வீடியோவை நடிகர் தனுஷுக்கும் டேக் செய்து பதிவிட்டிருந்தார். அதிலிருந்து இவரை ரசிகர்கள் டேவிட் பேபி என அழைத்து வந்தனர். அது போல் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த படத்தின் புட்ட பொம்மா பாடலுக்கும் நடனம் ஆடியுள்ளார் டேவிட் வார்னர்.

பாகுபலி
அது போல் வார்னர் ரஜினியையும் விட்டு வைக்கவில்லை. எந்திரன் படத்தில் துப்பாக்கி சுடும் காட்சியில் ரஜினியின் முகத்திற்கு பதிலாக தன்னுடைய முகத்தை வைத்து வார்னர் வெளியிட்டிருந்தார். அது போல் தர்பார் படத்தில் ரஜினி கெட்டப்பிலும் கலக்கினார். பாகுபலி வசனத்தையும் பேசினார்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications