Shame on you! நிர்மலா சீதாராமனுக்கு மக்களவையை விட டிவி விவாதம்தான் முக்கியமா? தயாநிதி மாறன் சரமாரி

Subscribe to Oneindia Tamil

டெல்லி: நாடாளுமன்ற விவாதத்தில் கலந்து கொள்ளாத நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறித்து திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சனம் வைத்துள்ளார்.

நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடந்த பிப்ரவரி 1ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட் 2023ஐ தாக்கல் செய்தார். 90 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார்.

இந்த நிலையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் நிகழ்த்திய உரை மீதான விவாதம் இரண்டு அவைகளிலும் நடைபெற்று வருகிறது.

கேள்வி நேரம்

கேள்வி நேரம்

பாராளுமன்ற எம்பிக்கள் கேள்விகளுக்கு துறை சார் உறுப்பினர்கள் பலர் பதில் அளித்து வருகிறார்கள். ஆனால் பாராளுமன்ற விவாதத்தில் சில அமர்வுகளில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவில்லை. கேள்வி நேர விவாதம் சிலவற்றில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்து கொள்ளவில்லை. நிர்மலா சீதாராமனின் இந்த செயலை தமிழ்நாடு திமுக எம்பி தயாநிதி மாறன் விமர்சனம் செய்துள்ளார்.

தயாநிதி மாறன்

தயாநிதி மாறன்

திமுக எம்பி தயாநிதி மாறன் தனது விமர்சனத்தில், பாராளுமன்றம் என்பதுதான் மிக முக்கியம்.. நீங்கள் பாராளுமன்ற உறுப்பினர். நம்முடைய தொகுதிகளில் இருக்கும் கிட்டத்தட்ட 12 லட்சம் மக்களுக்கு உறுப்பினர்களாக நாம் அவையில் இருக்கிறோம். அப்படி இருக்கும் போது நாடாளுமன்ற எம்பிக்கள் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளிக்க வேண்டும். நாங்கள் பல லட்சம் மக்களின் பிரதிநிதிகள் என்பதை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மறக்க வேண்டாம்.

நிர்மலா சீதாராமன்

நிர்மலா சீதாராமன்


நிர்மலா சீதாராமன் எங்களுக்கு பதில் அளிக்க வேண்டும். அவர் இங்கே நாடாளுமன்றத்தில் இருக்க வேண்டும். எங்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்காமல் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் டிவியில் விவாத நிகழ்ச்சி ஒன்றில் பேசிக்கொண்டு இருக்கிறார். இந்த நேரம் அவையில் இல்லாமல் அவர் விவாத நிகழ்ச்சியில் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் ஏன் இங்கே இல்லை?

 அவமானம்

அவமானம்

உங்களுக்குத்தான் இது அவமானம்.. Shame on you.. Shame on you.. நான் முழுதாக பேசி விடுகிறேன்.. பாராளுமன்றம் முக்கியமா? டிவி தொலைக்காட்சி விவாதம் முக்கியமா? நிதியமைச்சருக்கு பாராளுமன்றத்தின் மீது சற்றும் மரியாதையில்லை. பட்ஜெட் விவாதத்தில் இல்லாமல் டிவி விவாதத்தில் கலந்துக்கொண்டிருக்கிறார், என்று திமுக எம்பி தயாநிதி மாறன் கேள்வி எழுப்பி உள்ளார்.

மக்களால் தேர்ந்தெடுக்கபடவில்லை

மக்களால் தேர்ந்தெடுக்கபடவில்லை

நிதியமைச்சர் மக்களால் தேர்ந்தெடுக்கப்படவில்லை அவர் நியமன எம்பி என்பதால் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களை மட்டும் அல்லாது நாடாளுமன்றத்தையும் அவமதித்து உள்ளார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்களை மட்டும் அல்ல தான் சார்ந்த பாஜக உறுப்பினர்களையும் அவர் மதிக்கவில்லை என்பது அவர நாடாளுமன்றத்திற்கு வராததில் இருந்தே தெரிகிறது. பாஜக உறுப்பினர்களுக்காகவும் தான் நான் பேசிக் கொண்டிருக்கிறேன் எனவும் தயாநிதி மாறன் ஆவேசமாக பேசினார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+