மாநில அரசுகளால் இனி சட்டம் இயற்றவே முடியாதா? மகாராஷ்டிரா பாஜக கூட்டணி அரசையும் பந்தாடிய மத்திய அரசு!
டெல்லி: பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் மகாராஷ்டிரா மாநில அரசின் 'சக்தி' மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்க மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு மறுத்துவிட்டது. மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் நிலையில் மாநில அரசுகளின் புதிய சட்டம் தேவை இல்லை என மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு நிராகரித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மத்தியில் ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு தொடர்ந்து மாநில அரசுகளின் நடவடிக்கைகளுக்கு இடையூறாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாட்டுக்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க கோரும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆண்டுகள் பல ஓடிவிட்ட நிலையிலும் ஒப்புதல் தரவில்லை மத்திய அரசு. தற்போது புதிய கல்வி கொள்கை என்ற பெயரில் இந்தி திணிப்பை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கு தமிழ்நாடு கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகிறது.

தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு வரி வருவாயில் உரிய நிதி ஒதுக்கப்படவில்லை என்பதும் மத்திய அரசு மீதான நீண்டகால அதிருப்தி. தற்போது பாஜக ஆளும் மகாராஷ்டிரா மாநில அரசுக்கும் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு நெருக்கடியை கொடுத்துள்ளது.
மகாராஷ்டிராவில் முந்தைய காங்கிரஸ், உத்தவ் தாக்கரே சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகளை உள்ளடக்கிய மகா விகாஸ் அகாடி ஆட்சியில், பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்க வகை செய்யும் சக்தி மசோதா நிறைவேற்றப்பட்டது. மகாராஷ்டிராவின் சட்டசபை, சட்டமேலவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்ட இம்மசோதாவுக்கு மத்திய அரசு ஒப்புதல் தராமல் இழுத்தடித்து வந்தது.
அண்மையில் மகாராஷ்டிராவின் புனே பேருந்து நிலையத்தில் இளம் பெண் ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக அரசு மீண்டும், சக்தி மசோதாவுக்கு மத்திய அரசிடம் ஒப்புதல் கோரியிருந்தது. ஆனால் மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசோ, மாநில அரசின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட மசோதாவுக்கு ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பிவிட்டது. இதற்கான காரணத்தை மத்திய அரசு தெரிவிக்கவில்லை.
அதேநேரத்தில், மத்தியில் ஆளும் பாஜக கூட்டணி அரசு அண்மையில் நடைமுறைப்படுத்திய 3 புதிய குற்றவியல் சட்டங்கள் இருக்கும் போது மாநில அரசுகளுக்கு தனி சட்டம் தேவை இல்லை என்பதால் மகாராஷ்டிராவின் சக்தி மசோதாவை திருப்பி அனுப்பிவிட்டதாக மகாராஷ்டிரா அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதாவது மத்திய அரசின் சட்டத்தை மட்டுமே மாநில அரசுகள் செயல்படுத்த வேண்டும்; மாநில அரசு தனித்து சட்டம் நிறைவேற்றினால் ஒப்புதல் தராமல் திருப்பி அனுப்பும் என்கிற நிலைப்பாட்டை மத்தியில் ஆளும் பாஜக அரசு கையில் எடுத்திருப்பது மாநிலங்களின் உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தலாக உருவெடுத்திருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
-
"தயவு செய்து தண்ணீரை கொடுங்க.." இந்தியாவிடம் கெஞ்சும் பாகிஸ்தான்.. பஞ்சம் மோசமாக தாக்கும் போல! -
தங்கம் வைத்திருப்போருக்கு பெரிய மாற்றம்! ஏப் 1 முதல் 6 டிஜிட் HUID கட்டாயம்! உங்க பழைய நகை என்னாகும் -
சொத்து வைத்திருப்போர் கவனத்திற்கு! ஏப்.1 முதல் பத்திரப்பதிவில் பெரிய மாற்றம்.. இனி நிலம் இந்த விலை? -
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
H-1B விசா கட்டுப்பாடுகள் நீக்கம்.. அமெரிக்காவில் முக்கிய மசோதா.. இதுதான் இந்தியர்களுக்கு நல்ல செய்தி -
இதுக்கு மேல கடன் வாங்க முடியாது.. கஜானா காலி.. தத்தளிக்கும் தமிழக வெற்றிக் கழகம்.. அப்போ விஜய்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
வளைகுடா வளையம்: ஈரானிடம் இந்தியா வைத்த 'செக்'.. தவிப்பில் கச்சா எண்ணெய்! டெல்லி மெகா முடிவு -
திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்.. என்ன கேட்கப்பட்டது என விளக்கம் -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டிராகனின் வெள்ளி வேட்டை.. சீனாவைச் சுழற்றியடிக்கும் சில்வர் ஜுரம்.. வெள்ளி இனி குட்டித்தங்கம்.. ஏன்? -
முதல் விக்கெட்.. திமுக கூட்டணியில் விலகிய தமிழக வாழ்வுரிமை கட்சி.. அறிவித்தார் வேல்முருகன்












Click it and Unblock the Notifications