ஆறுதல் பெருமூச்சு.. கத்தாரில் 8 இந்தியர்களின் மரண தண்டனை குறைப்பு! வெளியுறவுத்துறை சொன்ன குட்நியூஸ்
டெல்லி: கத்தாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 8 இந்தியர்களுக்கான தண்டனை குறைக்கப்பட்டு இருப்பதாக மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்து இருக்கிறது.
கத்தார் நாட்டில் இயங்கி வரும் தஹ்ரா குளோபல் டெக்னாலஜிஸ் மற்றும் கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தில் ஆயுத படைகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு வந்தது. இதில் ஓய்வுபெற்ற 8 இந்திய கடற்படை வீரர்கள் பணிபுரிந்து பயிற்சி அளித்து வந்து உள்ளனர். இவர்கள் கத்தார் நாட்டின் அதிநவீன நீர் மூழ்கிக் கப்பல் குறித்த தகவல்களை உளவு பார்த்து இஸ்ரேலுக்கு வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அடுத்து கடந்த 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 8 இந்தியர்களும், அவர்கள் பணிபுரிந்த நிறுவனத்தின் உரிமையாளருமான ராயல் ஓமன் விமானப்படையின் ஓய்வுபெற்ற தலைவர் காமிஸ் அல் அஜ்மியும் கைது செய்யப்பட்டு கத்தாரில் தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

இது தொடர்பான வழக்கை விசாரித்த கத்தார் நீதிமன்றம், கடந்த அக்டோபர் மாதம் கேப்டன் பிரேந்திர குமார் வர்மா, கேப்டன் நவ்தேஜ் சிங் கில், கேப்டன் சௌரப் வசிஷ்ட், கமாண்டர் சுகுணாகர் பகலா, கமாண்டர் பூர்ணேந்து திவாரி, கமாண்டர் அமித் நாக்பால், கமாண்டர் சஞ்சீவ் குப்தா மற்றும் சைலர் ரேகேஷ் கோபகுமார் ஆகிய 8 இந்தியக் கடற்படை வீரர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பளித்து மரண தண்டனை விதித்தது. 8 இந்தியர்களுக்கு கத்தாரில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், அந்த நிறுவன உரிமையாளர் கடந்த ஆண்டு நவம்பர் மாதமே விடுதலை செய்யப்பட்டார்.
கத்தார் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு தங்களுக்கு அதிர்ச்சி தருவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பாக அனைத்து சட்ட உதவிகளும் செய்யப்படும் என்றும், அவர்களை தூக்கு தண்டனையில் இருந்து விடுவிப்பதற்காக அனைத்து வழிகள் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தது. இவர்கள் 8 பேரும் இந்தியக் கடற்படையில் சுமார் 20 ஆண்டுகள் வரை சிறப்பான பணிபுரிந்து பல்வேறு பதக்கங்களை வென்று இருக்கிறார்கள். இந்தியக் கடற்படையில் முக்கிய பதவிகளை வகித்துள்ளனர்.
இதில் கமாண்டர் பூர்ணேந்து திவாரி பிரவாசி பாரதிய சம்மான் என்ற வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருது பெற்றவர். 8 இந்தியர்களில் சிலர் இத்தாலி தொழில்நுட்பத்தில் இயங்கும் அதிநவீன நீர்மூழ்கிக் கப்பல் திட்டத்தில் வேலை செய்து வந்து உள்ளனர். உளவு புகாரில் கைதான 8 பேர் ஜாமீன் பெற முயற்சித்து பலன் கிடைக்காத நிலையில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர்கள் பணிபுரிந்த நிறுவனம் மூடப்பட்டு பணியில் இருந்த இந்தியர்கள் உட்பட பலர் அவரவர் நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் இந்திய வெளியுறவுத்துறை தற்போது முக்கிய தகவலை வெளியிட்டு உள்ளது. 8 இந்திய முன்னாள் கடற்படை வீரர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை குறைக்கப்பட்டு உள்ளது தான் அந்த தகவல். தூக்கு தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டதை அடுத்து தண்டனை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவித்து உள்ள வெளியுறவுத்துறை அடுத்தக் கட்ட நடவடிக்கை குறித்து சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை செய்து வருவதாக விளக்கமளித்து உள்ளது.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications