தீபாவளியன்று பகலிலும் பட்டாசு வெடிக்க அனுமதிக்க வேண்டும்.. தமிழக அரசு மேல்முறையீடு!
தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
டெல்லி: தீபாவளி அன்று 2 மணி நேரம்தான் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் விதித்த கட்டுப்பாட்டிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
இந்தியா முழுக்க வரும் நவம்பர் 6 மற்றும் 7 தேதிகளில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. இதற்காக மக்கள் இப்போதே தயாராகி வருகிறார்கள்.

இந்த நிலையில் பட்டாசு வெடிப்பதால் சுற்றுசூழல் மாசு அடைகிறது என்று உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கப்பட்டது. பட்டாசை தடை செய்ய வேண்டும் என்று பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடுத்து இருந்தனர்.
இந்த நிலையில் இதில் கடந்த வாரம் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதித்தது. தீபாவளி தினத்தன்று இரவு 8 மணி முதல் 10 மணிவரை மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும். பகல் நேரத்தில் பட்டாசு வெடிக்க அனுமதி இல்லை என்று தீர்ப்பு வழங்கியது.
இது மக்கள் மத்தியில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
பட்டாசு வெடிக்க கூடுதல் நேரம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மனுதாக்கல் செய்துள்ளது. தீபாவளி நாளில் 2 மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும் என்பது பராம்பரியத்திற்கு எதிரானது என்று மனுதாக்கல் செய்துள்ளது.
காலையில் பட்டாசு வெடிப்பதுதான் தமிழக கலாச்சாரம். இதனால் உச்ச நீதிமன்ற உத்தரவில் திருத்தம் வேண்டும் என்று தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.
-
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி












Click it and Unblock the Notifications