சிங்கப் பெண்ணே.. தீபிகா படுகோன் மாஸ்.. ஜேஎன்யூ பல்கலைக்கழகத்திற்கு வருகை.. மாணவர்களுடன் கைகோர்ப்பு
Recommended Video
டெல்லி: டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்றுவரும் போராட்டத்தில், பாலிவுட் முன்னணி நடிகை தீபிகா படுகோனே பங்கேற்றார்.
டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில், ஹாஸ்டல் கட்டண உயர்வு உள்ளிட்டவற்றுக்கு எதிராக போராட்டம் நடத்தி வந்த இடதுசாரி மாணவர்கள் மீது முகமூடி அணிந்து வந்த வன்முறை கும்பல் ஒன்று கடந்த ஞாயிற்றுக்கிழமை கடும் தாக்குதல் நடத்தியது.

இது தொடர்பாக பல்வேறு வீடியோக்கள் வெளியாகி நாடு முழுக்க பரபரப்பை ஏற்படுத்தியது. பாஜகவின் மாணவர் அமைப்பான ஏபிவிபி இந்த தாக்குதலின் பின்னணியில் இருப்பதாக இடதுசாரி மாணவர் அமைப்புகள் கூறுகின்றன.
அதேநேரம் தங்கள் தரப்பு மீதும், தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இடதுசாரி மாணவர்கள்தான் இதன் பின்னணியில் இருப்பதாகவும், ஏபிவிபி குற்றம் சாட்டி வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து விசாரித்து வரும் நிலையில், தாக்குதல் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இடதுசாரி மாணவர்கள் அமைப்பு சார்பில் ஜவர்கலால் நேரு பல்கலைக்கழக வளாகத்திற்குள் இன்றும் தர்ணா போராட்டம் நடத்தி வருகிறது.
Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/9P6IMzs0AS
— ANI (@ANI) January 7, 2020
இந்த நிலையில், இன்று இரவு சுமார் 8 மணி அளவில் தீபிகா படுகோனே அங்கு வருகை தந்தார். சுமார் 10 நிமிடங்களுக்கு மேல் மாணவர்களுடன் போராட்டத்தில் பங்கெடுத்தவர் எதுவும் தெரிவிக்காமல் அங்கிருந்து கிளம்பிச் சென்றுவிட்டார்.
#WATCH Delhi: Deepika Padukone joins students at Jawaharlal Nehru University, during their protest against #JNUViolence. pic.twitter.com/Ytc28MCGHT
— ANI (@ANI) January 7, 2020
தேசிய குடியுரிமை சட்டத் திருத்தம் போன்ற முக்கியமான விஷயங்களில் பாலிவுட் நடிகர், நடிகைகள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை என்று பரவலாக விமர்சனங்கள் எழுந்து வரும் நிலையில், நம்பர் ஒன் நடிகையாக அறியப்படும் தீபிகா படுகோன், ஜவகர்லால் நேரு பல்கலைக்கழக விவகாரத்தில் நேரடியாக பங்கெடுத்து இருப்பது அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. போராடக்கூடிய மாணவர்களுக்கு இது உற்சாகத்தை அளிப்பதாக அமைந்துள்ளது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications